வேறு எந்த நோயும் இல்லை: கொரோனாவால் மட்டும் உயிரிழந்த சென்னை இளம்பெண்

சென்னையைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் வேறெந்த இணை நோயும் இல்லாமல் கொரோனா தாக்கத்தால் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரே உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,756 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது குறித்தும் சென்னையில் இன்று மட்டும் 1,261 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறித்தும் செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தமிழகத்தில் கொரோனாவால் 64 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில் சென்னையில் மட்டும் நிகழ்ந்த உயிரிழப்புகள் 26 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று சென்னையில் உயிரிழந்த 21 வயது இளம்பெண்ணுக்கு வேறெந்த இணை நோயும் இல்லை என்றும், இரண்டு நாட்களாக சளி காய்ச்சல் மற்றும் ஒரு நாள் மூச்சுப் பிரச்னை மட்டுமே இருந்ததாகவும், இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் ஜூலை 6ஆம் தேதி காலை 6.53 மணிக்கு அனுமதிக்கப்பட்டதாகவும், மருத்துவமனையில் சேர்ந்த ஒரே நாளில் நேற்று காலை 7 மணியளவில் அவர் உயிரிழந்தார் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு சர்க்கரை நோய், இதய நோய் உள்பட பல இணை நோய்கள் இருந்துள்ளது. ஆனால் வேறெந்த நோயும் இல்லாமல் வெறும் சளி, காய்ச்சல் மட்டுமே இருந்த இளம்பெண், கொரோனாவுக்கு பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More News

மீண்டும் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை!

பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே அவ்வப்போது தனது சமூக வலைதளத்திலும் தனது அதிகாரபூர்வ இணையதளத்திலும் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி

ஜூலை 27ம் தேதி 12ம் வகுப்பு பொது தேர்வு: தமிழக அரசு அறிவிப்பு

12ம் வகுப்பு பொது தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27ம் தேதி தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சத்தியமா நான் எரிக்கல: திருச்சி சிறுமி எரிப்பு வழக்கில் கைதான இளைஞர் வாக்குமூலம்

திருச்சி மாவட்டம் அதவத்தூர் பாளையம் என்ற பகுதியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காட்டு பகுதியில் திடீரென எரிந்த நிலையில் மரணம் அடைந்தார்

திருமணம் குறித்து சர்ச்சை கருத்து: பெண் மீது புகார் அளித்த வனிதா!

தன்னைப் பற்றியும் தனது திருமணம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசும் பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனிதா விஜயகுமார் காவல் துறையில் புகார் அளித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தேறிவரும் சென்னை, மோசமாகும் மற்ற மாவட்டங்கள்: தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் பாதிப்பு 4000ஐ தாண்டிய நிலையில் கடந்த மூன்று நாட்களாக 4000க்கும் குறைவாகவே பாதிப்பு அடைந்துள்ள நிலையில்