தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கஃபே கலந்துகொண்ட திருமணத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு!!!

  • IndiaGlitz, [Thursday,April 16 2020]

 

தமிழகத்தின் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்து வரும் நிலோபர் கஃபே கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரு திருமணத்தில் கலந்து கொண்டார். வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் இத்திருமணம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட 35க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் கொரோனா அறிகுறியால் தற்போது தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. சோதனையில் கடந்த திங்கள்கிழமை பெண் ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஏப்ரல் 11 ஆம் தேதி தமிழக முதல்வர் கூட்டிய அவரச ஆலோசனைக் கூட்டத்திலும் நிலோபர் கஃபே கலந்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை அமைச்சருக்கு கொரோனா அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. நேற்று மாலை வரை அமைச்சர் தனிமைப்படுத்தலுக்கு அறிவுறுத்தப்படவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு இருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

More News

இந்தியாவுக்கு 650,000 கொரோனா மருத்துவக் கருவிகளை  அனுப்பி வைத்துள்ளது சீனா!!!

கொரோனா நோய்த்தொற்றை எதிர்த்துப்போராட 650,000 கொரோனா மருத்துவக் கருவிகளை சீனா இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

ஊரடங்கில் பாதிக்கப்படும் ஏழைகளுக்காக ரூ.9.4 லட்சம் நிதி திரட்டிய சிறுமி!!!

ஹைத்ராபாத் அடுத்த இந்தூரில் ஊரடங்கு உத்தரவினால் பல்லாயிரக்கணக்கான ஏழைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராகவா லாரன்ஸ் அளித்த அடுத்த ரூ.15 லட்சம்: யாருக்கு தெரியுமா?

நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சமீபத்தில் கொரோனா தடுப்பு நிதியாக ரூ 3 கோடி அளித்தார் என்பது தெரிந்ததே

சிறந்த மனிதர்: ரக்சனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய ஜாக்குலின்

விஜய் டிவியில் பார்வையாளர்களால் பெரும் புகழ்பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று 'கலக்கப்போவது யாரு' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்கள் ரக்சன் மற்றும் ஜாக்குலின் என்பது தெரிந்ததே

போலீஸ் கெடுபிடியால் 65 வயது தந்தையை 1 கிமீ தோளில் தூக்கி சென்ற மகன்: நெகிழ்ச்சி வீடியோ

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் இரண்டாவது கட்டமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை இருக்கும் என்றும் இந்த முறை ஊரடங்கு உத்தரவை கடுமையாக