கொரோனாவால் பாதிக்கப்பட்ட சர்ச்சைக்குள்ளான, சிபிஐ இயக்குனர் காலமானார்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் காலமானார்.
68 வயதான ரஞ்சித் சின்ஹா-விற்கு நேற்று கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவர் இன்று காலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
1974-இல் பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர், கடந்த 2012 டிசம்பர் முதல் 2014 டிசம்பர் வரை சிபிஐ இயக்குநராக பதவி வகித்துள்ளார். ரஞ்சித் சின்ஹா ஐபிஎஸ் அதிகாரியாக பதவியேற்ற பின் இந்தோ திபத்திய எல்லைபகுதியின் காவல் படைக்கு தலைமை வகித்து வந்தார். அடுத்து ரயில்வே பாதுகாப்பு படைக்கு தலைமையாக இருந்தவர், சிபிஐஇன் மூத்த பதவிகளிலும் இருந்து வந்துள்ளார்.
சிபிஐ இயக்குனராக 2012-இல் பதவியேற்ற பின் பல சர்ச்சைகளில் சிக்கினார். 2ஜி ஊழல் மற்றும் நிலக்கரி ஊழல் போன்ற பிரச்சனைகளில் சிக்கிய ரஞ்சித் சின்ஹா மீது, ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் சட்டத்துறை அமைச்சர் அஷ்வினி குமார் மற்றும் அரசு அதிகாரிகளிடம் நிலக்கரி ஊழல் தொடர்பான அறிக்கையை பகிர்ந்துகொண்டார்.இக்குற்றத்திற்காக உச்சநீதிமன்றம் இவரை கடந்த 2013, மே மாதம் கடுமையாக சாடியது. இவரின் தலைமையிலான சிபிஐ அணி கூண்டில் அடைபட்ட கிளிபோல செயல்பட்டு வருகிறது என, உச்ச நீதிமன்றம் இவரை கடுமையாக விமர்சித்தது. 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை இவர் ரகசியமாக சந்தித்து வருவதாகவும் ஆவணங்கள் வெளியானதை தொடர்ந்து, விசிட்டர்ஸ் பதிவேட்டை வைத்து குற்றத்தில் தொடர்புடையவர்களை இவர் சந்தித்தார் என்பது தெரிய வந்துள்ளது.
சென்ற 2014-செப்டம்பரில் ரஞ்சித் சார்பில் இதுபற்றி விளக்கம் கூற வேண்டும் என்று, உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ரஞ்சித் சின்ஹா ஊழல் வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்களை ரகசியமாக தொடர்பு கொண்டதற்காக, அவர் மீது ஏராளாமான குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டன. இதுகுறித்து அவரை விசாரிக்கும் படி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதன்பேரில் கடந்த 2017-இல் இவர்மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments