டபுள் பவருடன் கொரோனா தடுப்பூசி: கெத்துக் காட்டும் விஞ்ஞானிகள்!!! எப்ப கிடைக்கும் தெரியுமா???

 

தற்போதைய நிலைமையை பொறுத்தவரை கொரோனா தடுப்பூசி மட்டுமே இறுதி தீர்வு என ஒட்டுமொத்த உலகமும் நம்பிக் கொண்டிருக்கிறது. காரணம் பொருளாதா நெருக்கடி, கொரோனா பரவல் விகிதம் போன்றவை நோயைக் கட்டுப் படுத்துவதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கின்றன. இதனால் கொரோனா தடுப்பூசி குறித்த எதிர்பார்ப்புகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பல நாடுகள் தயாரித்த கொரோனா தடுப்பூசி தற்போது கிளினிக்கல் சோதனைக்கு உட்படுத்தப் பட்டு இருக்கிறது. ஆனால் பெரும்பாலான தடுப்பூசிகள் இப்போதுவரை முதற்கட்ட சோதனையிலே இருக்கின்றன. ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி கிளினிக்கல் சோதனையை முற்றிலும் முடித்து விட்டாதாகவும் செய்திகள் தெரிவித்து இருக்கிறது.

இந்நிலையில் ஆஃக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தயாரித்த கொரோனா தடுப்பூசி 3 ஆம் கட்ட சோதனைக்கு தயாராகி இருப்பதாகக் கூறப்படுகிறது. அதைத்தவிர அந்த விஞ்ஞானிகள் தெரிவித்த மற்றொரு தகவலும் ஒட்டு மொத்த உலகத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக அமைந்திருக்கிறது. அதாவது இதுவரை செய்யப்பட்ட கிளினிக்கல் சோதனையில் ஆஃக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் கொரோனா தடுப்பூசி, கொரோனாவிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தியதோடு கூடவே “டி“ செல்களையும் சேர்த்து உருவாக்கி இருப்பதாக அதன் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இதனால் கொரோனா தடுப்பூசி இரட்டைப் பாதுகாப்புடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பொதுவாக தடுப்பூசி நோய்த்தொற்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கும். இங்கிலாந்தின் ஆஃக்ஸ்போர்ட் பல்லைக்கழகம் மற்றும் ஜென்னர் இன்ஸ்டியூட் இணைந்து உருவாக்கியுள்ள ChAdOxinCov-19 என்ற தடுப்பூசி மருந்து நோய் எதிர்ப்பு ஆற்றலோடு சேர்த்து டி செல்களையும் உருவாக்கி இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னர் உடலில் குறைந்து விடலாம். ஆனால் டி செல்கள் ஆண்டுகணக்கில் நோய்க்கு எதிராக உடலில் வேலை செய்யும் எனவும் அதன் விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தி இருக்கின்றனர். இதுகுறித்த விவரங்களை இங்கிலாந்தின் ஊடகமான The Daily telegraph வெளியிட்டு இருக்கிறது.

உடலில் நீண்ட காலத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தக்க வைக்கவும் இந்த டி செல்கள் உதவும் எனக் கூறப்படுகிறது. இதனால் உலக விஞ்ஞானிகளின் மத்தியில் புது நம்பிக்கை உருவாகி இருக்கிறது. கிளினிக்கல் சோதனைக்கு உட்படுத்தப் பட்ட தன்னார்வலர்களின் ரத்த மாதிரிகளை ஆய்வுக்குட் படுத்தியபோது இது கண்டுபிடிக்கப் பட்டதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இந்த ஆய்வுக் குழுவிற்கு இங்கிலாந்து அரசாங்கம் மட்டுமல்லாது அஸ்ட்ராஜெமோகா என்ற மருந்து நிறுவனமும் பெரிய அளவிலான தொகையை அளித்து உதவி வருவதாகக் கூறப்படுகிறது.

தற்போது இந்தியாவில் கிளினிக்கல் சோதனைக்கு உட்படுத்தப் பட்டு இருக்கும் கோவேக்சின், வைரஸ் திரிபுடைய கொரோனா தடுப்பூசி என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆஃக்ஸ்போர்ட் விஞ்ஞானிகள் தயாரித்து உள்ள கொரோனா தடுப்பூசி மனித குரங்குகளில் நோயத்தொற்றை பலவீனப்படுததும் விதமாகவும் அதே நேரத்தில் கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதத்தை மட்டுப்படுத்தும் விதமாகவும் உருவாக்கப் பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

பிளஸ் 2வில் முதல் மார்க் எடுத்த மாணவர் தற்கொலை: வேலூர் அருகே அதிர்ச்சி சம்பவம்

ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் போது, தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும்

கொரோனா ஊரடங்கு எதிரொலி: சினிமா ரசிகர்களுக்கு புதிய வகை தியேட்டர் ஏற்பாடு!

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக உலகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன என்பதும், ஒரு சில நாடுகளில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்ட

கொரோனாவால் வேலையிழப்பு: முறுக்கு வியாபாரம் செய்யும் பேராசிரியர்

கொரானா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பலர் வேலையை இழந்து வருமானத்தை இழந்துள்ள நிலையில் தற்போது கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் தனது

கொரோனா நேரத்தில் பப்புவா நியூ கினியாவுக்கு இப்படியொரு சோதனையா??? பரபரப்பு தகவல்!!!

இந்தோனேசியாவிற்கு அருகில் இருக்கும் ஒரு தீவு பப்புவா நியூ கினியா. அத்தீவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

வட்டியும் முதலும் சேர்த்துக் கொடுத்துடுறேன்… விஜய் மல்லையாவின் புது டெக்னிக்!!!

இந்தியப் பொதுத்துறை வங்கிகளிடம் வட்டிக்குக் கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் விஜய் மல்லையா