கொரோனா தடுப்பு மருந்து : இஸ்ரேல் அரசின் புதிய அறிவிப்பு என்ன???
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து விட்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் நப்தாலி பென்னட் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்நாட்டின் உயிரியல் ஆராய்ச்சிக்கான IIBR ஆய்வு மையத்தின் விஞ்ஞானிகள் “மோனோக்ளோனல் நியூட்ராலைசிங் ஆன்டிபாடி” எனப்படும் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளனர். இது கொரோனா வைரஸை தாக்கி அழிக்கும் தன்மைக் கொண்டது எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை மனிதர்கள் மீது பரிசோதனை செய்யப்பட்டுள்ளதா என்பதைக் குறித்து தெளிவான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த திங்கட்கிழமை, அந்நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இஸ்ரேல் விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாகவும் இது தடுப்பூசிக் கண்டுபிடிப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டுகிறது என்றும் குறிப்பிட்டு இருந்தார். இந்த தடுப்பு மருந்தானது நோயை உண்டாக்கும் கொரோனா நோய்க்கிருமிகளுக்கு எதிராக குறிப்பிடத்தக்க ஆன்டிபாடிகளை மனித உடலில் உருவாக்கும் எனவும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வழக்கமான தடுப்பு மருந்துகள் ஆய்வகத்தில் வைத்து வளர்க்கப்பட்ட வைரஸ் கிருமிகளில் இருந்தே உருவாக்கப் படுகின்றன. இந்தத் தடுப்பு மருந்தும் இதே முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் விஞ்ஞானிகள் இத்தாலி, ஜப்பான் போன்ற பல நாட்டின் கொரோனா நோயாளிகளிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை வைத்து இந்த தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளனர். இந்தத் தடுப்பு மருந்துக்கான காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com