கொரோனா தடுப்பூசி:  இறுதிக்கட்ட சோதனையை நடத்திவரும் நாடுகள்!!! நிலவரம் என்ன???

  • IndiaGlitz, [Friday,May 08 2020]

 

கொரோனா பரவல் உலகம் முழுவதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் தடுப்பூசி பற்றிய ஆராய்ச்சிகள் உலக நாடுகளால் விரைப்படுத்தப் பட்டிருக்கின்றன. அமெரிக்கா மனிதர்களின் மீதான தடுப்பூசி சோதனையை நடத்திக் காட்டியிருக்கிறது. இன்னும் ஜெர்மனி, இஸ்ரேல், இத்தாலி, சீனா போன்ற நாடுகள் இறுதிக் கட்டத்தில் இருந்தாலும் இந்தச் சோதனை முடிவுகள் WHO வால் ஆராயப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு வருவதற்கு 18 மாதங்கள் ஆகும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ்க்கான தடுப்பூசி சோதனையில் இறுதிக்கட்டத்தில் இருக்கும் நாடுகள் மற்றும் மருந்துகளைப் பற்றிய ஒரு தொகுப்பு.

அமெரிக்கா - அமெரிக்காவின் மாடர்னா தெரபெடிக்ஸ் மருந்து நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியை மனிதர்களின் மீது ஏற்கனவே சோதனை செய்ய ஆரம்பித்து விட்டது. சியோட் நகரில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தின் மருந்தை முதல் கட்டமான தன்னார்வலர்கள் 4 பேருக்கு செலுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. mRNA-1273 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தடுப்பு மருந்து மற்ற வைரஸ் தடுப்பு மருந்துகளைப் போல ஆய்வகத்தில் வைத்து வளர்க்கப்பட்ட மரபணுக்களில் இருந்து தயாரிக்கப்பட்டது அல்ல. கொரோனா வைரஸின் மரபணு குறியீட்டை பிரதியெடுத்து இந்த மருந்து உருவாக்கப்பட்டதாகவும் அதன் விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர். இதனால் மருந்து செலுத்தும் மனிதர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது எனவும் கொரோனா நோய்க்கு எதிராக நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் ஆற்றல் இந்த மருந்தக்கு இருப்பதாகவும் அந்நிறுவனத்தின் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

ஜெர்மனி - அந்நாட்டின் Biotechnology நிறுவனம், அமெரிக்க மருந்து நிறுவனமான Pfizer உடன் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை முதல் முறையாக பரிசோதனை செய்யவிருப்பதாக ஏப்ரல் 24 வாக்கில் செய்திகள் வெளியிட்டது. இதுகுறித்து, ஜெர்மன் Biotechnology நிறுவனத்தின் தலைமை நிர்வாகி உகுர் சாஹின் மிக விரைவாக மனிதர்களின் மீது பரிசோதனை செய்வோம் என்று தெரிவித்து இருந்தார். இந்தத் தடுப்பூசி சோதனைக்காக 18 வயது முதல் 55 வயதுடைய 200 தன்னார்வலர்களைத் தேர்ந்தெடுக்க உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் – அந்நாட்டின் உயிரியல் ஆராய்ச்சிக்கான IIBR ஆய்வு மையத்தின் விஞ்ஞானிகள் “மோனோக்ளோனல் நியூட்ராலைசிங் ஆன்டிபாடி” எனப்படும் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து உள்ளதாக செய்திகள் வெளியாகியது. ஆனால் இதுவரை மனிதர்கள் மீது பரிசோதனை செய்யப்பட்டுள்ளதா என்பதைக் குறித்து தெளிவான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தடுப்பு மருந்தானது நோயை உண்டாக்கும் கொரோனா நோய்க்கிருமிகளுக்கு எதிராக குறிப்பிடத்தக்க ஆன்டிபாடிகளை மனித உடலில் உருவாக்கும் என அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் நப்தாலி பென்னட் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இத்தாலி - ரோம் நகரில் உள்ள டாகிஸ் மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாக நேற்று அந்நாட்டு அரசு செய்தி வெளியிட்டது. இந்தத் தடுப்பூசி முதலில் எலிகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டது எனவும் எலிகளில் இந்த மருந்து ஆன்டிபாடிகளை உருவாக்கியதாகவும் அந்நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மனித செல்களிலும் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக மிக சிறந்த முறையில் ஆன்டி பாடிகளை உருவாக்கியதாகவும் கூறப்படுகிறது. மனிதர்களின் மீதான சோதனைக்கு ஒப்புதலை பெற காத்திருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் அறிக்கை விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சீனா – பெய்ஜிங்கை சார்ந்த சினாவொக் பயோடெக் நிறுவனம் கொரோனா வைரஸ்க்கு எதிராகச் செயல்படும் “பிகோவாக்” என்ற தடுப்பூசியைக் கண்டுபிடித்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டு இருக்கிறது. குரங்குகளுக்கு இந்தத் தடுப்பூசி செலுத்திய மூன்று வாரங்கள் கழித்து அவற்றிற்கு கொரோனா வைரஸ் செலுத்தப்பட்டபோது குரங்குகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை எனபதும் தெரிய வந்துள்ளது. இந்த மருந்தை மனிதர்களின் மீது செலுத்தி சோதனை செய்யவும் தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

திரைப்படத்துறையினர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி: தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு

தமிழ் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரையின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணியின் போது உரிய சமூக இடைவெளி

நேற்று நிலவு நடத்திய அற்புதமான கண்காட்சி!!!  

இயற்கை சில நேரங்களில் தனது அழக்கை காட்டி மனிதர்களை ஊற்சாகப்படுத்தும். அப்படியொரு நிகழ்வை நேற்று, நிலவு அரங்கேற்றியிருந்தது

சசிகுமாரிடம் பெற்ற கடனை திருப்பி கொடுத்துவிடுவேன்: ஒரு விவசாயியின் தன்னம்பிக்கை

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே. குறிப்பாக விவசாயிகள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

கொரோனா விடுமுறையில் 2 முன்னணி இயக்குனர்களுடன் டிஸ்கஸ் செய்யும் பிசி ஸ்ரீராம்

கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து கோலிவுட் திரையுலகில் கடந்த இரண்டு மாதங்களாக படப்பிடிப்பு உள்பட எந்த பணியும் நடைபெறவில்லை.

சூப்பர் ஸ்டார் நடிகருக்கு வில்லனாகும் அரவிந்தசாமி?

ஜெயம் ரவி நடிப்பில் மோகன் ராஜா இயக்கிய 'தனி ஒருவன்' திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.