ஆகஸ்ட் 12 இல் கொரோனா தடுப்பூசி???? வியப்பில் ஆழ்த்தும் ரஷ்யாவின் புது  அறிவிப்பு!!!

  • IndiaGlitz, [Thursday,July 30 2020]

 

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் உள்ள Gamaleya Research Institute of Epidemiology and Microbiology என்ற ஆய்வு நிறுவனம் கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடித்து உள்ளது என்றும் வருகிற ஆகஸ்ட் 12 ஆம் தேதி இந்த தடுப்பூசி புதிய மருந்துக்கான பதிவினையும் பெற்றுவிடும் எனவும் ப்ளூம் பெர்க் செய்தி வெளியிட்டு இருக்கிறது. புதிய மருந்துகளுக்கான மருந்து பதிவினை பெற்றதில் இருந்து 3 முதல் 7 நாட்களுக்குள் இம்மருந்து மக்களின் பயன்பாட்டிற்கு வந்துவிடும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் உலக விஞ்ஞானிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சாதாரண நாட்களில் வைரஸ் அல்லது பாக்டீரியாவினால் ஏற்படும் நோய்களுக்கு மருந்துகளை உருவாக்க வேண்டுமென்றால் குறைந்தது ஒரு வருடம் கூட பிடிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் கொரோனா ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தால் தற்போது விஞ்ஞானிகள் அவசரம் காட்டிவருவதாகவும் கூறப்படுகிறது. காரணம் ஜுலை 2 ஆம் தேதி Tass வெளியிட்டுள்ள செய்தியின்படி மாஸ்கோவின் புதிய கொரோனா தடுப்பூசி முதற்கட்ட சோதனையை தொடங்கியிருக்கிறது. அடுத்து 13 ஜுலையில் அதன் இரண்டாவது சோதனையை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இப்படி இரண்டு சோதனைகளை முடித்து இருந்தாலும் மூன்றாவது சோதனையை முடிக்காமல் பொது பயன்பாட்டிற்கு கொண்டு வரமுடியாது. ஆனால் மூன்றாவது சோதனையை முடிக்காமலே பொது பயன்பாட்டிற்கு கொண்டுவர இந்நிறுவனம் துடிக்கிறது என இண்டியன் எஸ்க்பிரஸ் செய்தி வெளியிட்டு இருக்கிறது. முதல் சோதனை என்பது குறைவான நபர்களைக் கொண்டு நடத்தப்படும் சோதனையாகும். இது பெரும்பாலும் மருந்துகளின் பாதுகாப்புக்காக நடத்தப்படுவது. அடுத்துள்ள இரண்டாவது கட்ட சோதனை நோய்களுக்கு எதிராக மருந்து ஏற்படுத்தும் நோய் எதிர்ப்பு சக்தியைப் பற்றியது. இந்த இரண்டாவது கட்ட சோதனையானது சில நூறு கணக்கான தன்னார்வலர்களைக் கொண்டு நடத்தப்படும்.

மூன்றாவது கட்ட சோதனைக்கு குறைந்தது ஆயிரம் தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு அவர்களை இரு குழுக்களாகப் பிரித்து முதல் குழுவில் தடுப்பூசி ஏற்படுத்தும் தாக்கத்தை அறிந்து கொண்டு இரண்டாவது குழுவிற்கு தடுப்பூசியை வழங்க பரிந்துரை செய்யப்படும். இப்படி எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் விஞ்ஞானிகள் தற்போது அவசர கதியில் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இந்தியாவில் உள்ள சீரம் இன்ஸ்ட்டியூட் ஆஃப் வைராலஜி நிறுவனம் ஆக்ஸ்போர்ஃடு பல்கலைக் கழகத்தின் கொரோனா தடுப்பூசிகளை லட்சக்கணக்காக தயாரிக்க ஒப்பந்தத்தை செய்திருக்கிறது. இந்த ஒப்பந்தம் வெளியானவுடன் புதிதாகத் தயாரிக்கப் போகும் மருந்தின் விலையும் இந்திய ஊடகங்களில் வெளியாகி கடும் பரபரப்யை ஏற்படுத்தியது. அதோடு இந்தியாவின் சீரம் மருந்து நிறுவனம் இந்த மருந்துக்கான தயாரிப்புகளை வருகிற செப்டம்பரில் ஆரம்பிக்கும் எனவும் செய்தி வெளியிடப்பட்டன.

ஆனால் ஆக்ஸ்போர்ஃடு நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி இன்னும் மூன்றாம் கட்ட சோதனைக்கு தயாராகவில்லை என்பதே நிதர்சனமாக இருக்கிறது. அந்நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசி முதல் இருகட்ட சோதனையில் கொரோனாவிற்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கியது என அந்நிறுவனத்தின் விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர். இந்த அடிப்படையில் உலகம் முழுவதும் ஆக்ஸ்போர்ஃடு மற்றும் ஆஸ்ட்ராஜேனேக்கா நிறுவனம் இணைந்து தயாரித்த புதிய கொரோனா தடுப்பூசி மீது எதிர்பார்ப்பு கிளம்பியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் மற்ற கொரோனா தடுப்பூசிகளைப் போல இந்த தடுப்பூசி உருவாக்கப் படவில்லை. சிம்பன்சி வகை குரங்குகளிடம் நோயை ஏற்படுத்தும் வலிமைக் குறைக்கப்பட்ட வைரஸைக் கொண்டு இந்த தடுப்பூசி தயாரிக்கப் பட்டுள்ளது. இது கொரோனா வைரஸில் உள்ள ஸ்பைக் புரதத்தைத் தாக்கி அழிக்கும் வலிமைக் கொண்டது எனவும் அதன் விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்துனர். மேலும் இத்தடுப்பூசி இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து மக்களிடம் மூன்றாவது கட்ட சோதனை செய்து பார்க்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் இந்தியாவின் சீரம் பல்கலைக் கழகத்துடன் மேற்கொள்ளப் பட்ட ஒப்பந்தத்தில் மாறுதல்களை செய்யுமாறு அறிவுறுத்தி மருந்து பரிசோதனையை தள்ளி வைத்திருக்கிறது சீரம் நிறுவனம். இதனால் மருந்து கிடைப்பதில் தாமதம் ஏற்படுவும் எனவும் கூறப்படுகிறது.

ரஷ்யா, இங்கிலாந்து தவிர அமெரிக்காவின் மார்டனா நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்து 2 கட்ட சோதனையை முடித்துக் கொண்டு தற்போது தன்னார்வ அடிப்படையில் விலங்குகளுக்கு சோதனை செய்யப்பட்டு வருகிறது. மிக விரைவில் மூன்றாவது கட்ட சோதனைக்கு தயாராகும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இதுவரை 25 கொரோனா தடுப்பூசிகள் இரண்டு கட்ட சோதனைகளை முடித்துக் கொண்டிருக்கிறது எனவும் அதில் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற சில நிறுவனங்கள் மட்டுமே மூன்றாவது கட்டத்துக்கு நெருங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதைத்தவிர உலகம் முழுவதும் தன்னார்வ அடிப்படையில் 139 கொரோனா தடுப்பூசிகள் முதற்கட்ட சோதனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

ஹர்திக் பாண்டே வெளியிட்ட குழந்தையின் புகைப்படம்: இணையதளங்களில் வைரல்

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஹர்திக் பாண்டியாவுக்கும் நடாஷா என்ற நடிகைக்கும் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது.

புதிய கல்விக்கொள்கை: குஷ்புவை அடுத்து கமல் ஆதரவு

மத்திய அரசு நேற்று அறிவித்த புதிய கல்வி கொள்கைக்கு பெரும்பாலானோர் வரவேற்பும் ஒருசிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

சாதாரண சைக்கிளை வைத்து தண்டவாளத்தில் சாகசம்!!! ரயில்வே ஊழியருக்கு குவியும் பாராட்டு!!!

மிகப் பெரிய ரயில்வே போக்குவரத்துத் துறையைக் கொண்ட நாடு இந்தியா. பல்லாயிரக் கணக்கான பணியாளர்கள்

தமிழகம் வரை நீளுகிறதா கேரளத் தங்கக்கடத்தல் விவகாரம்!!! தீவிர விசாரணையில் என்.ஐ.ஏ!!!

கேரள அரசியலில் கடும் பரபரப்பை ஏற்படுத்திய தங்கக்கடத்தல் வழக்கை தற்போது தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் மிகத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் அறிவிப்பில் என்னென்ன புதிய தளர்வுகள்?

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஜூலை 31-ஆம் தேதி வரை ஆறாம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் நாளையுடன் அந்த ஊரடங்கு முடிவடைகிறது.