18-க்கு மேற்பட்டவருக்கு கொரோனா தடுப்பூசி இலவசம்...! தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!

தமிழகத்தில் 18 வயதிற்கும் அதிகமானோருக்கு, கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க இருப்பதாக தமிழக அரசு சார்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது மத்தியஅரசு. இதுவரை 45-வயதிற்கும் அதிகமானோர், சுமார் 14 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து வரும் மே-1-ஆம் தேதி முதல், 18-வயதிற்கும் அதிகமானோருக்கு இலவச தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. மத்திய அரசே நிறுவனங்களிடமிருந்து கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் மத்திய அரசானது, மே -1 முதல் மாநில அரசுகள் நேரடியாக நிறுவனங்களிடமிருந்து தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள அனுமதி தந்துள்ளது. இதனால் மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசிகளுக்காக காத்திருக்க தேவையில்லை, விரைவில் பெற்றுக்கொள்ளலாம்.

இதைத்தொடர்ந்து தமிழக அரசானது முதல் கட்டமாக சுமார் 1.5 கோடி தடுப்பூசிகளுக்கு ஆர்டர் தந்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, இந்தியாவிலே 18-வயதிற்கும் அதிகமானோருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசியை வழங்கும் முதல் மாநிலம் தமிழகம் தான். கொரோனா தீவிரமாக பரவி வருவதால், அதைத்தடுக்க தடுப்பூசி போடும் பணிகளை அரசு தீவிரமாக எடுத்துவருகிறது. தற்போது வரை 55.51 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக 45 வயதிற்கும் அதிகமானோருக்கு இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மே-1 முதல் 18 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்த இருப்பதால், அதற்கான தீவிரப்பணிகள் நடைபெற்று வருகிறது. முதல்வர் உத்தரவின்பேரில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, பணிகள் சரியாக நடந்துவருகிறது. இதன் முதல் கட்டமாகத்தான் 1.5 கோடி கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்து வழங்க தமிழக அரசு சார்பாக உத்தரவிடப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இலவச கொரோனா தடுப்பூசிகளை செலுத்த, அதற்கு பதிவு செய்யும் கோவின் தளம் இன்று செயல்பட துவங்கவுள்ளது.