இந்தியாவில் கொரோனா தடுப்பூசி ரூ.225 க்கு கிடைக்கும்!!! சீரம் மருந்து நிறுவனத்தின் புதிய அறிவிப்பு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகிலேயே மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்ட்டியூட் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் முன்னணியில் இருக்கும் ஆக்ஸ்போஃர்டு பல்கலைக் கழகத்தின் கொரோனா தடுப்பூசியை தயாரித்து விற்பனை செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஆக்ஸ்போஃர்டு பல்கலைக் கழகம் மற்றும் AstraZeneca கூட்டணியில் உருவாகி வரும் கொரோனா தடுப்பூசி தற்போது முதற்கட்ட சோதனையை வெற்றிக்கரமாக முடித்துள்ளது. 2 மற்றும் 3 ஆம் கட்ட சோதனையை இந்தியா, ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து மருத்துவ மனைகளில் நடத்த இருப்பதகாவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் ஆக்ஸ்போஃர்டு கொரோனா தடுப்பூசியை பரிசோதித்துப் பார்க்க சீரம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 18 வயதுக்கு மேற்பட்ட 1,600 நபர்களை தேர்வு செய்து இந்தியாவின் 17 இடங்களில் உள்ள மருத்துவ மனைகளில் பரிசோதனைகள் நடத்தப்பட இருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. இந்நிலையில் கடந்த ஜுலை 15 ஆம் தேதி வாக்கில் இந்தியாவின் சீரம் மருந்து நிறுவனம் ஆக்ஸ்போஃர்டு பல்கலைக் கழகத்துடன் லட்சக் கணக்கான மில்லியன் டாலர் ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கிறது. இதன்படி 1.5 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவின் சீரம் இன்ஸ்ட்டியூட் தயாரித்து உலக நாடுகளுக்கு விற்பனை செய்ய இருப்பதாகவும் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆதார் பூனவல்லா தெரிவித்து இருந்தார்.
வருகிற அக்டோபரில் ஆக்ஸ்போஃர்டு பல்கலைக் கழகத்தின் கொரோனா தடுப்பூசி அனைத்துக்கட்ட சோதனைகளையும் முடித்துக் கொண்டு தயாரிப்பு ரெடியாகும் எனவும் சீரம் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இந்நிலையில் அதன் விலை நிர்ணயம் செய்யும் வேலையும் அந்நிறுவனம் ஈடுபட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதன்படி 2021 தொடக்கத்தில் இந்தியாவில் வசிக்கும் பத்து கோடி பேருக்கு தடுப்பு மருந்து கிடைக்க ஏற்பாடு செயப்பட்டு வருவதாகவும் உலக வங்கியால் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் (LMIC) கொண்ட நாடுகளாக வரையறுக்கப்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசியின் விலையை 3 டாலர்கள் (ரூபாய் மதிப்பில் 225) என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யும் பணி துரிதப்படுத்தப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout