கொரோனா சிகிச்சை: மிகவும் நம்பப்பட்ட Remdesivir குறைந்த இரத்த அழுத்தத்தை தூண்டுகிறது!!! அதிர்ச்சி தகவல்!!!

  • IndiaGlitz, [Monday,May 18 2020]

 

அமெரிக்காவின் சிகாகோ Gilead Sciences மருத்துவப் பல்கலைக்கழகம் கொரோனா சிகிச்சைக்கு Remdesivir மருந்தைப் பயன்படுத்தி அதிக நோயாளிகளை குணப்படுத்தியது. அப்பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் முயற்சியால் இதுவரை 8 ஆயிரம் கொரோனா நோயாளிகள் குணமடைந்ததாகவும் கூறப்படுகிறது. கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்த மருந்தை கொடுக்கும்போது அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவதாகவும் கூறப்பட்டது.

இதுவரை கொரோனா சிகிச்சைக்கு என்று முறைப்படுத்தப் பட்ட எந்த மருந்துகளும் கண்டுபிடிக்கப் படாத நிலையில் Remdesivir உலக நாடுகளிடையே பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. இந்தியாவும் இந்த மருந்தை உற்பத்தி செய்வதற்கான பணியில் ஈடுபட்டது. தயாரிப்புக்காக காப்புரிமையும் பெறப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த மருந்து குறைந்த இரத்த அழுத்தத்தை உண்டாக்குகிறது என வர்ஜீனியா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்று எச்சரிக்கை விடுக்கிறது. கொரோனா நோய்ச் சிகிச்சையில் இந்த மருந்து குறைந்த இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி இதயத் துடிப்பில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் இதனால் மாரடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் புதிய உடல் பாதிப்புகளையும் அந்த ஆய்வு தெளிவு படுத்தியிருக்கிறது. கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு சுவாசக் கோளாறுகள், மற்றும் நுரையீரல் பாதிப்புகள் தோன்றும் என இதுவரை கூறப்பட்டு வந்த நிலையில் கொரோனா வேறு சில உடல் பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது என அப்பல்கலைக் கழகத்தின் தலைமை விஞ்ஞானி வில்லியம் பிராடி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் ரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்தி மாரடைப்பு, இருதய செயலிழப்பு, ரத்தக்கட்டு, ஸ்டோக் போன்ற கடுயைமான பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுவதாகக் கூறியுள்ளனர். மேலும் நுரையீரல், மூச்சுக்குழாய்களில் கடுமையான வீக்கத்தை (சைட்டோகைன்) ஏற்படுத்தி மரணத்தை கொடுக்கும் அபாயமும் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

இதயம் தொடர்பான கடுமையான ஆபத்துகள் ஏற்படுவதாக கூறும் அந்த விஞ்ஞானிகள் ஏற்கனவே இதய பாதிப்பு இருப்பதால் கொரோனா மேலும் பாதிப்பை ஏற்படுத்துகிறதா அல்லது கொரோனா புதிதாக இதய உறுப்புகளை பாதிக்கிறதா எனத் தெளிவாகத் தெரியவில்லை எனவும் தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் இருதய தசைகளில் இறுகுவதால் உடலுக்குச் செல்லும் ரத்தம் தடை படுகிறது. இதுவும் சில நேரங்களில் கட்டிகளை உருவாக்கி விடுகிறது என்ற அதிர்ச்சி தகவலை வர்ஜீனியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வெளியிட்டு இருக்கின்றனர். கொரோனாவின் மரபணு, அதன் வகைகள், நோய்ப் பரவும் தன்மை, வைரஸ் ஏற்படுத்தும் அறிகுறிகள், உடல் உறுப்புகளின் பாதிப்புகள் என கொரோனா மேலும் புதுப்புது அவதாரங்களை எடுத்துக் கொண்டே வருகிறது. இந்த மாற்றங்கள், கொரோனா தடுப்பூசி ஆய்வுகளில் கால தாமதத்தை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.

More News

ஜிகா, எய்ட்ஸை துரத்தி அடித்த ஒருநாடு, கொரோனாவின் கோரப்பிடிக்குள் சிக்கிக் கொண்டது எப்படி??? கள நிலவரம்!!!

அரசமைப்பு உருவாகாத காலக்கட்டத்தில் ஒரு பழமொழி சொல்லப்படுவது உண்டு. ”அரசன் அன்றே கொல்வான்

சென்னையில் 7000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் எவ்வளவு?

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை தமிழக சுகாதாரத்துறை அறிவித்து வரும் நிலையில் சற்றுமுன் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து

டார்ச் லைட் மட்டுமே உடை: வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ

டார்ச் லைட்டை மட்டுமே உடையாகக் கொண்டு பிரபல நடிகை ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

எம்பரர் ரஜினி, கிங்மேக்கர் அஜித், ரூலர்ஸ் விஜய்: பிரபல நடிகையின் பதில்!

ரஜினியை எம்பரர் என்றும், அஜித்தை கிங் மேக்கர் என்றும், விஜய்யை ரூலர்ஸ் என்றும் பிரபல நடிகை தனது ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

தியேட்டர், ஓடிடி வெவ்வேறு தளங்கள், அறிக்கைப்போர் வேண்டாம்: பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் இந்தியா முழுவதும் திரையரங்குகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் மூடப்பட்டுள்ளன. இதனால் புதிய திரைப்படங்கள் வெளியிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.