கொரோனா எதிரொலி: சூடுபிடித்து இருக்கும் மாட்டுக் கோமியம் மற்றும் சாணத்தின் விற்பனை!!!
- IndiaGlitz, [Wednesday,March 18 2020]
கொரோனாவை மூலதனமாக வைத்து கிருமிநாசினி பொருட்களின் விற்பனை சூடுபிடித்த நிலையில் தற்போது மாட்டுக் கோமியம் மற்றும் சாணம் கூட விற்பனையில் முதன்மை இடம் பிடித்திருக்கிறது. 2 மாடுகளைச் சொந்தமாக வைத்துள்ள கொல்கத்தாவைச் சேர்ந்த மஹாபூப் அலி அதன் சாணம் மற்றும் கோமியத்தைத் தற்போது விலைக்கு விற்று வருகிறார்.
அவரிடம் கொரோனாவில் இருந்து தப்பிப்பதற்காக மாட்டுக் கோமியம் மற்றும் சாணத்தை பலர் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஒரு லிட்டர் கோமியத்தின் விலை ரூ.500 ஆகவும், ஒரு கிலோ பசுவின் சாணம் ரூ. 500 ஆகவும் விற்பனை செய்யப் படுகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.
அண்மையில் இந்து மகா சபையினர் மாட்டுக் கோமியத்தை கொரோனா விற்கு தடுப்பு மருந்தாகக் கூறிய நிலையில் தற்போது கொல்கத்தாவில் மாட்டுச் சாணம் மற்றும் கோமியத்தின் விற்பனை சூடு பிடித்து இருக்கிறது. இது குறித்து மஹாபூப் அலி கூறும்போது, பசுவின் பால் பொருட்களை விட சாணம் மற்றும் கோமியம் அதிகமான வருமானத்தை பெற்றுத் தருவதாகக் குறிப்பிட்டு உள்ளார்.