கொரோனா பாதித்தவருக்கு அறிகுறியே இல்லைனாலும் பெரிய பிரச்சனைதான்!!! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியா போன்ற சில நாடுகளில் கொரோனா பாதிப்பு பெரும்பாலானவருக்கு அறிகுறிகளை வெளிப்படுத்துவதில்லை என்ற செய்தி மிகவும் வரவேற்கத்தக்கதாகப் பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இந்தக் கருத்து வரவேற்கத் தக்கது அல்ல, அறிகுறியே வெளிப்படுத்த வில்லை என்றாலும் கொரோனா நோய்த்தொற்று மனித உடலில் பெருத்த சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது என்ற அதிர்ச்சி தகவலை லண்டன் விஞ்ஞானிகள் Brain என்ற ஆய்விதழில் கூறியுள்ளனர். கொரோனா நோய்த்தொற்று மனிதர்களைத் தாக்கும்போது இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் சுரந்து நோய்க்கு எதிராக வேலை செய்யும். அப்படி நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் சுரப்பதால் சுவாச உறுப்புகளில் வீக்கம் போன்ற கட்டிகள் தோன்றுகிறது என்றும் இதனால் சைட்டோகைன் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்றும் முன்னமே மருத்துவர்கள் கூறியிருந்தனர்.
தற்போது அறிகுறிகளே இல்லாத கொரோனா நோயாளிகளுக்கு அவர்களுடைய மூளையில் வீக்கம், ஸ்ட்ரோக், நரம்பு பாதிப்பு, டெலிரியம் போன்ற குறைபாடுகள் தோன்றுகின்றன என்பதை லண்டன் மருத்துவர்கள் கண்டுபிடித்து உள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் நேரடியாக மூளையைத் தாக்குவதால் இந்தப் பாதிப்புகள் தோன்றுவதில்லை என்றும் ஆரோக்கியமான செல்களை வைரஸ் தாக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்தான் இவை என்பதையும் மருத்துவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். மேலும் லண்டன் மருத்துவர்கள் கொரோனா அறிகுறியே இல்லாமல் இருக்கும் நோயாளிகளுக்கு (ADEM) Acute disseminated Encephalomyelitis என்ற சிக்கல் தோன்றுவதாகவும் குறிப்பிடுகின்றனர். மனித உடலில் உள்ள ஆரோக்கியமான செல்களைத் தாக்கிவிடுவதால் முதுகு தண்டுவட நரம்பு பாதிப்பும் தோன்றுகின்றன.
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று நேரடியாக மூளையோடு தொடர்புடைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற தகவலை இதுவரை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் அறிகுறி இல்லாத 43 கொரோனா நோயாளிகளுக்கு கடுமையான மூளை பாதிப்புகள் ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அதில் 20 பேருக்கு டெலிரியம் என்ற மூளை செயல்பாடு குறைவு ஏற்பட்டு இருக்கிறது. மேலும் சிலருக்கு குழப்பான மனைநிலை, பித்தம்பிடித்தது போன்ற உணர்வு தோன்றியிருப்பதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 12 பேருக்கு மூளையில் வீக்கம், 8 பேருக்கு ஸ்ட்ரோக், 8 பேருக்கு நரம்பு குறைபாடு இருப்பதும் ஆய்வில் தெரிய வந்து இருக்கிறது. இதனால் அறிகுறியே இல்லாமல் இருக்கும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஐரோப்பாவில் கடந்த 1920, 1930, 1918 களில் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை தொற்றுகளால் மூளையில் அதிக பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. அதுபோல தற்போது கொரோனா அறிகுறியே இல்லாத நோயாளிகளுக்கு மூளை பாதிப்பு அதிகளவில் தாக்குமா என்பதைக் குறித்தும் ஆய்வினை மேற்கொண்டு வருவதாகவும் விஞ்ஞானிகள் தகவல் அளித்து உள்ளனர். தற்போதைய ஆய்வில் கொரோனா வைரஸ் மனித மூளைப் பகுதியில் உள்ள செரிப்ரோஸ்பைனஸ் பகுதியில் இல்லை என்றும் இதனால் மூளைப்பகுதி பாதிக்கப் படுவதில்லை என்றும் லண்டன் மருத்துவர்கள் தெளிவு படுத்தி இருக்கின்றனர். நேரடியாக மனித மூளையைத் தாக்காமல் மனித உடலில் உள்ள ஆரோக்கியமான செல்களை வைரஸ் தாக்குவதால் இந்தக் குறைபாடு வருவதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments