காற்றில் 6 அடி வரை பரவும் கொரோனா....! மக்களே உஷார்...!
- IndiaGlitz, [Monday,May 10 2021]
கொரோனா வைரஸ் காற்றிலும் பரவி விட்டதால், மக்களுக்கு எளிதில் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கொரோனாவின் 2-ஆம் அலை மக்களை கொடூரமாய் தாக்கி, உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் மக்களுக்கு புதிய வழிகாட்டுதல் ஒன்றை அறிவித்துள்ளது. காற்றின் வழியாக கொரோனா தொற்று மக்களுக்கு எளிதில் பரவுவதாகவும், அக்காற்றை சுவாசிப்பவர்களுக்கும் கோவிட் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கொரோனாவின் முதல் அலையில், தொற்று பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை தொட்டாலோ, அவர்கள் அருகில் இருந்தாலோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் 6 அடிக்கு அருகில் இருந்தால் கூட காற்றில் வைரஸ் பரவி, நமக்கு தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
காற்றோட்டம் அதிகம் இல்லாத இடங்கள் மற்றும் மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களில் அதிகம் பரவ வாய்ப்புள்ளது. இதற்கு காரணம் தேவையான அளவு காற்றோட்டம் கிடைக்காததால், வைரஸ் அங்கே சுற்றிக்கொண்டு இருக்கும். இதனால் 1 அடி வரை காற்றில் சென்று பரவிவிடுகிறது இந்த கொரோனா தொற்று.
இதனால் மக்கள் நெருங்கிய உறவுகளிடம் கூட முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடனும் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் காற்றோட்டம் இல்லாத இடங்களில் ஆபத்து அதிகமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.