கொரோனா பரவல்....! பிரச்சாரத்தை ரத்து செய்த மம்தா...!
- IndiaGlitz, [Monday,April 19 2021]
கொரோனா தீவிரமாய் பரவி வருவதால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் மேற்கு வங்கத்தின் முதல்வருமான மம்தா பேனர்ஜி, தனது கொல்கத்தா பிரச்சாரத்தை ரத்து செய்துள்ளார்.
கொரோனா அதிகமாக பரவி வருவதால், மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து தேர்தல் பிரச்சாரங்களை ரத்து செய்தார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. மற்ற தலைவர்களும் இதுபற்றி சிந்திக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதைத்தொடர்ந்து மேற்குவங்க முதல்வர் மற்றும் திரிணாமுல் கட்சியின் தலைவருமான மம்தா, கொல்கத்தாவில் செய்யவிருந்த பிரச்சாரத்தை பாதியிலே ரத்து செய்துள்ளார்.
இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரியன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது,
மம்தா பேனர்ஜி, சட்டசபை தேர்தலுக்காக கொல்கத்தாவில் பிரச்சாரம் செய்ய இருந்தார். கொரோனா தீவிரமாக பரவி வருவதால், இனி எந்த பிரச்சாரங்களையும் செய்யமாட்டார் என்றும், மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் முடிய கடைசி நாளாக 26-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த இறுதிநாளில் மட்டும் மம்தா அவர்கள் கூட்டம் நடத்துவார். மேலும் பிறமாவட்டங்களில் தேர்தல் பேரணிக்கான நேரத்தை 30 நிமிடமாக குறைத்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.