செங்கல்பட்டு, மதுரையில் கிடுகிடுவென உயரும் கொரோனா பாதிப்பு: சொந்த ஊர் சென்றவரகள் கலக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததை அடுத்து பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சென்னையை காலி செய்து விட்டு அவரவர் சொந்த ஊருக்கு பயணம் செய்யத் தொடங்கினர். அப்படியிருந்தும் சென்னையில் கொரோனா பாதிப்பும் அதிகரித்துக்கொண்டே வந்தது. நேற்று சென்னையில் கொரோனாவால் சுமார் 2000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னையில் இருந்து சொந்த ஊரை நோக்கி ஆயிரக்கணக்கானோர் சென்ற நிலையில் தற்போது தமிழகம் முழுவதுமே கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்று செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குறிப்பாக இன்று ஒரே நாளில் செங்கல்பட்டு மாவட்டட்தில் 225 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,876 என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. அது மட்டுமன்றி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ அரசு அவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த சில நாட்களாக கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் மதுரை மாவட்டத்தில் இன்று மேலும் 195 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் இன்று மட்டும் 195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து மதுரை மாவட்டத்தில் மொத்தம் 1,672 பேர்களுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
சென்னையில் கொரோனா அதிகம் பரவுவதாக பயந்து சொந்த ஊர் சென்ற பொதுமக்கள், தற்போது சொந்த ஊரிலும் கொரோனா மிக வேகமாக பரவி வருவதால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments