கொரோனா பரவல்;  உலகில் முக்கியத் தலைவர்களின் நேர்மறை, எதிர்மறை கருத்துகளின் தொகுப்பு!!!

  • IndiaGlitz, [Wednesday,April 08 2020]

 

கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதில் இருந்தே உலகளவில் சில பொருத்தமற்ற விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த விவாதம் நாடுகளுக்கிடையிலான போட்டியாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. உண்மையில் கொரோனா வைரஸ் SARS-Covid-2 என்பது உருவாக்கப்பட்டது அல்ல, இயற்கையாக பரிணமித்தது என்பதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தின. இந்த வைரஸ் விலங்குகளிடம் நோய் ஏற்படுத்தும் தன்மைக்கொண்டது. ஆனால் மனித உடலில் பரவி வளர்ச்சி அடைந்து தற்போது மனிதர்களுக்கு நோயைபரப்பி வருகிறது எனவும் கூறப்படுகிறது. இந்தக்கருத்துக்கள் அனைவருக்கும் தெரிந்ததுதான் என்றாலும், சில தலைவர்கள் இந்த வைரஸ் பரவலின் தொடக்கத்தில் சற்று சிரமமான சூழ்நிலையை எதிர்க்கொண்டனர். அந்த நிலைமைகளில் சிலர் முரண்பட்ட கருத்துகளையும் வெளிப்படுத்தினர். ஆரம்பத்தில் இத்தகைய கருத்துகள்மீது விமர்சனம் வைக்கப்பட்டாலும் தற்போது அவற்றை மக்கள் ரசித்து வரும் நிலைமையும் உருவாகியிருக்கிறது.

கொரோன வைரஸ் அமெரிக்காவில் ஜனவரி 21 ஆம் தேதி உறுதிசெய்யப்பட்டது. அன்றுமுதல் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இது சீனா வைரஸ், சின வைரஸ், சீனாவின் உயிரி ஆயுதம் எனப் பல குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார். இன்னொரு பக்கம் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கொரோனா வைரஸை சீனாவின் வுஹாண் மாகாணத்தில் அமெரிக்க இராணுவம் தான் பரப்பியது என்று குற்றம்சாட்டினார். இந்த விவாதங்கள் இன்றுவரை தொட்ர்ந்து கொண்டே இருக்கிறது. இவர்களைத் தவிர மற்ற நாடுகளிடமும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றன.

அமெரிக்காவின் மீது ஈரான் நாட்டைச் சார்ந்த ஷியா பிரிவு மதகுரு முக்தாதா அல் சதர் ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார். “அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் எதிரிகளிடையே கொரோனா வைரஸை பரப்பினார்” என மதகுரு கூறியுள்ளார். மேலும், ஈராக் நாட்டு மக்கள் ஊரடங்கு உத்தரவை யெல்லாம் விட்டு விட்டு மத வழிபாடுகளில் ஈடுபடுங்கள் எனவும் பேசியிருக்கிறார். இந்த கருத்துக்குத் தற்போது வலுவான எதிர்ப்புகள் கிளம்பியிருக்கிறது. இதற்கும் ஒருபடி மேலே போய் இன்னொரு கருத்தையும் மதகுரு கூறியிருக்கிறார். “ஒரே பாலினத்தவர்கள் திருமணம் செய்ய ஆதரவு சட்டத்தைப் போட்ட நாடுகளில்தான் இந்த கொரோனா வைரஸ் அதிகமாக பரவியிருக்கிறது எனவும் தெரிவித்தார். சீனா, இத்தாலி போன்ற நாடுகளை கருத்தில் கொண்டே இவ்வாறு மதகுரு பேசியதாகவும் தற்போது சொல்லப்படுகிறது.

ஜிம்பாபே நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் ஒப்பா முச்சின்சூரி, “தங்கள் நாட்டின் மீது பொருளாதாரத் தடைகள் விதித்த மேற்கத்திய நாடுகளை கடவுள் கொரோனா வைரஸ் மூலம் பழிவாங்குகிறார்” எனக் கூறியிருக்கிறார்.

மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவேல் கொரோனா எச்சரிக்கையை முதலில் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் பல கூட்டங்களிலும் கலந்து கொண்டார். அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில் தற்போது தான் பொதுக்கூட்டங்களை அவர் தடைசெய்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கெல்லாம் ஒருபடி மேலேபோய், பெலாரஸ் நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் லூக்காஷென்கோ விற்கு அந்த நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதை சிறிதும் பொருட்படுத்தாத அதிபர் ஒரு கால்பந்து போட்டியின் போது கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் “வைரஸ் இங்கு சுற்றி திரிவதை என்னால் பார்க்கமுடியவில்லை” எனத் தெரிவித்து இருக்கிறார். “கொரோனா போனற் எச்சரிக்கை எல்லாம் ஒரு மனநோயைத் தவிர வேறு ஒன்றுமில்லை” எனவும் கூறியிருந்தார். இந்த “வைரஸை எதிர்க்கொள்ள வோட்கா போன்ற மதுபானங்களை அருந்தினாலே போதும்” எனவும் பேசியிருக்கிறார். அதிபரின் இந்த கருத்துகளுக்கு அந்நாட்டில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. தற்போது அதிபர் தனது கருத்துக்கள் கேலியானவை என ஒத்துக்கொண்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ, கொரோனா வைரஸை குறைத்து மதிப்பிடவில்லை. அதற்குமாறாக, அந்நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டன. மக்களின் நடமாட்டம் குறைக்கப்பட்டதால் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலைமையை சமாளிக்க பிரதமர் “அரசாங்கத்தை மிரட்ட வேண்டம். அரசாங்கத்திற்கு சவால் விடாதீர்கள். நீங்கள் தோற்று போவீர்கள்” என எச்சரித்தார். இவர்தான் முன்னதாக மக்கள் ஊரடங்கு உத்தரவிற்கு கட்டுப்படவில்லை என்றால் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட எதிர்மறை கருத்துகளுக்கு மத்தியில் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விட்டோ தனது நாட்டு மக்களிடம் முதலில் கொரோனா தகவலை முறையாக தெரிவிக்கவில்லை. ஒருவேளை உடனடியாக தெரிவித்து இருந்தால் மக்கள் பீதியடைந்து இருப்பர்கள். நாட்டில் உணவுபற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் எனத் தன்மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார். இப்படியிருக்க அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக்குழுவின் தலைவர் “சில மூலிகை பானங்களை பயன்படுத்தி இந்தோனேசீய மக்கள் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து தப்பித்து வருகிறார்கள்” எனக் கூறியிருக்கிறார்.

கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பிரிட்டம் பிரதமர் போரிஸ் ஜான்சன் “கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவர்களிடம் கைக்குலுக்கக் கூடாது என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. நான் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கைக்குலுக்கினேன் என மார்ச் 3 ஆம் தேதி தெரிவித்து இருந்தார். ஆனால் மார்ச் 27 ஆம் தேதி கொரோனா பாதிப்பினால் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

நீங்கள் கதை பிரியர்களா? இதோ உங்களுக்காக ஒரு சேனல்

சினிமா செய்திகளை அவ்வப்போது சினிமா ரசிகர்களுக்கு சுடச்சுட தந்து கொண்டிருக்கும் Indiagitz, Newsglitz மூலம் டிரெண்ட்

நாட்டாமையின் வேற லெவல் ஃபெர்மாமன்ஸ்: வைரலாகும் அருண்விஜய் வீடியோ

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளதால் தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர்.

கமலுக்கு பதிலடியும் அஜித்துக்கு பாராட்டும் தெரிவித்த தமிழக அமைச்சர்

தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் கொரோனா நிவாரண நிதி கொடுத்த அஜித்துக்கு பாராட்டும் மத்திய மாநில அரசை விமர்சனம் செய்து கடிதம் எழுதிய கமல்ஹாசனுக்கு பதிலடியும் கொடுத்துள்ளது

தற்கொலைக்கு முயன்ற குடும்பத்தை சமயோசிதமாக காப்பாற்றிய ஓட்டல் உரிமையாளர்

தனது ஓட்டலில் சாப்பிட வந்த ஒரு குடும்பம் தற்கொலைக்கு முயன்றதை சமயோசிதமாக காப்பாற்றிய ஓட்டல் உரிமையாளரின் சுவாரஸ்யமான சம்பவம் தான் இந்த கதை

வீட்டிற்கே வரும் காய்கறிகள்: தமிழக அரசின் அபார முயற்சி

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியமான தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை வாங்க பொது மக்கள் திண்டாடி வருகின்றனர்