தமிழகத்தில் கொரோனா பாதுகாப்பு; வீடுகளில் தனிமைப் படுத்தப் பட்ட 2,635 பேர்!!!

  • IndiaGlitz, [Wednesday,March 18 2020]

தமிழகத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 2,635 பேரை அவர்களது வீடுகளில் தனிமைப் படுத்தி வைத்து இருப்பதாகத் தமிழக சுகாதாரத் துறை இயக்குனரகம் தெரிவித்து இருக்கிறது. இவர்கள் மேலும், 28 நாட்களுக்குத் தனிமைப் படுத்தி தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப் படுவார்கள் என்றும் சுகாதாரத் துறை தெரிவித்து இருக்கிறது.

மேலும், 24 பேர் மருத்துவமனைகளில் வைத்து கண்காணிக்கப் பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டோரின் எண்ணிக்கையில் சென்னையைச் சார்ந்தவர்களே அதிகம் என்பதும் குறிப்பிடத் தக்கது. அதிகப் பட்சமாக 934 பேர் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

சென்னையைத் தவிர்த்து தருமபுரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தலா 4 பேர் தனிமைப் படுத்தப் பட்டு இருக்கின்றனர். தமிழகம் முழுவதும் கொரோனா அறிகுறிகள் இருப்பதாகச் சந்தேககிக்கப் பட்டு 139 பேரின் மாதிரிகள் சேகரிக்கப் பட்டு பரிசோதனைக்கு அனுப்பப் பட்டது என்றும் அதில் 138 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை என்பதும் தெரிய வந்து இருக்கிறது எனச் சுகாதாரத் துறை நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

மேலும், நோய் பாதிக்கப் பட்ட ஒருவர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருக்கிறார். தற்போது அவரது உடல் நிலை தேறி வருவதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்து இருக்கிறது.

நேற்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் “பிரான்ஸ், இத்தாலி உளிளிட்ட பல்வேறு நாடுகளில் பணியாற்றிய தமிழர்கள் கொரோனா அச்சத்தின் காரணமாக நேற்று துபாய் வழியாகத் தமிழகம் திரும்பியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா அறிகுறி இருந்ததால் பூந்தமல்லியில் உள்ள அரசு பொது சுகாதார நிலையத்தில் தனி அறையில் வைக்கப் பட்டனர். அவர்களது ரத்த மாதிரிகள் சோதனை செய்த போது கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப் பட்டது எனவும் தெரிவித்து இருந்தார்.
 

More News

இந்தியாவில் முதல் கொரோனா நோயாளிக்கு சிகிச்சை பார்த்த மருத்துவருக்கு கொரோனா..!

76 வயதான முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்று அவருக்கு சிகிச்சையளிக்க மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

2000 ரூபாய் நோட்டுகளின் நிலைமை என்ன??? தொடரும் சந்தேகங்களுக்கு விளக்கம்

கடந்த சில தினங்களாக ATM மெஷின்களில் 2000 ரூபாய் நோட்டுகளை உள்ளீடு செய்ய முடியாமல் பலர் தவிர்த்து வந்தனர்

கொரோனாவை முறியடிக்க புதிய மருந்து கண்டுபிடித்துள்ளோம்..! அர்ஜுன் சம்பத்.

ஆடாதொடா போன்ற பல மூலிகைகளை சேர்த்து நிலவேம்பு கசாயம் ஃபார்முலா 2.0வை உருவாக்கியுள்ளோம். இதை மக்கள் அனைவருக்கும் இந்து மக்கள் கட்சி கொண்டு சேர்க்கும்.

சென்னை தி.நகர் கடைகளை மூட உத்தரவு: கொரோனா படுத்தும் பாடு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திரையரங்குகள், மால்கள், கடைகள் ஆகிவற்றை மூட வேண்டும் என தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது.

கைலாசாவிலும் கொரோனாவா..! என்ன சொல்கிறார் நித்தியானந்தா..?!

"கைலாசாவில் கொரோனா இல்லை. சிவா பெருமான் எங்களை காக்கிறார்" என சொல்லப்பட்டிருந்தது. இது நித்தியானந்தாவின் உண்மையான டிவிட்டர் பக்கம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.