கொரோனா SARS-covid-2 வைரஸ் மேலும் 11 வகைகளைக் கொண்டிருக்கிறது!!! இந்திய விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா நாவல் வைரஸ் பல புதுப்புது பரிமாணங்களையும் தன்மைகளையும் கொண்டதாக பரவிவருகிறது. இதுகுறித்து தெளிவு பெறுவதற்காக இந்திய விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர். அந்த ஆய்வில் கொரோனா நாவல் வைரஸ் என்பது 11 வகைகளை கொண்டது என்றும் அதில் A2a என்ற வகை குறுகிய காலத்தில் அனைத்து வைரஸ்களின் தன்மைகளையும் மாற்றியமைத்து மனிதர்களுக்கு நோய்களை பரப்பிவருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த ஆய்வை குறித்த முடிவுகளை விஞ்ஞானிகள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிட்டுள்ளனர்.
தற்போது உலகத்தை தாக்கிவருகிறது SARS-covid-2 புதிய கொரோனா நாவல் வைரஸ். கொரோனா குடும்ப வைரஸில் ஒன்று என்பதை விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தி இருந்தனர். முன்னதாக, புதிய கொரோனா நாவல் SARS-covid-2 வைரஸ் மனிதர்கள் மட்டுமல்லாது நாய், புலி போன்ற விலங்குகளுக்கும் பரவியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் பரிசோதனையில் விலங்குகளுக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பதாக முடிவுகள் வந்தாலும் இந்த வைரஸ் விலங்குகளுக்கு எந்த பாதிப்புகளையும் ஏற்படுத்தவில்லை என்பதையும் விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தி இருந்தனர். அதையடுத்து இந்திய விஞ்ஞானிகள் 25 வகைக்கும் மேற்பட்ட வௌவால்களை ஆய்வு செய்து வௌவால்களிலும் கொரோனா வைரஸ் இருப்பதாக முடிவுகள் வெளியிட்டனர். இந்திய வௌவால்களில் கொரோனா வைரஸ் இருப்பதாக வெளிவந்த செய்திகளால் பரபரப்பு கிளம்பியது. இதுகுறித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வௌவால்களில் காணப்படும் கொரோனா வைரஸ் ஒரு துணை வைரஸ் மட்டுமே என்பதையும் தெளிவுப்படுத்தியது.
தற்போது விரிவுபடுத்தப்பட்ட இந்த ஆய்வில் இந்திய விஞ்ஞானிகள் கொரோனா நாவல் SARS-covid-2 வைரஸில் மேலும் 11 வகையான வைரஸ்கள் இருக்கலாம் என்றும் அதில் சுவாசநோய் பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் ஆதிக்கம் பெற்றதாக இருக்கிறது எனவும் ஆய்வு முடிவு வெளியிட்டு இருக்கிறது. சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா நாவல் வைரஸில் மேலும் 10 வகைகள் புதிதாக பரிணாமம் பெற்றிருக்கின்றன. அதில் A2a என்ற வகை ஆதிக்கம் செலுத்துபவையாகத் தற்போது பரவிவருகிறது என்றும் இந்திய விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
கொரோனா நோய்த்தொற்று பரவிய 55 நாடுகளில் 3,600 நபர்களிடம் இருந்து இந்தச் சோதனைக்காக கொரோனா வைரஸ்களின் RNA கள் சேகரிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா நாவல் வைரஸில் உள்ள A2a சில நாடுகளில் 80% ஆக பரவிவருகிறது என்றும் இந்தியாவில் இதன் தாக்கம் 45% ஆக இருக்கிறது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். மேலும், A2a வகை மிகவும் திறமையானதாக இருப்பதாகவும் எனவே பரவல் விகிதத்தில் அதிகத் தாக்கத்தை இது ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கை செய்திருக்கின்றனர். கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் உருவாக்கப்படும்போது A2a வகையில் விஞ்ஞானிகள் அதிக கவனத்தைக் கொண்டிருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டனர்.
கொரோனா வைரஸ்கள் குறிப்பிட்ட பிராந்தியங்கள் மற்றும் நாடுகளில் அதிகளவு பரவிவருகிறது. எனவே கொரோனா நாவல் வைரஸின் மரபணுவில் புது மாற்றங்கள் தோன்றியிருக்கவும் வாய்ப்பிருப்பதாக இந்திய விஞ்ஞானிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். அடிப்படையில் கொரோனா வைரஸ் மனித சுவாசப் பாதைகளில் காணப்படும் செல்களின் மேற்பரப்பில் உள்ள ACE2 புரதத்தை பற்றிக்கொள்வதற்கு வசதியாக கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதம் தன்னை வடிவமைத்துக் கொண்டிருக்கிறது. இது எப்படி நடக்கிறது என்பதையும் இந்திய விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தியிருக்கின்றனர். வைரஸின் A2a வகை அமினோ அமிலம் அஸ்பார்டிக் அமிலத்திலிருந்து கிளைசினுக்கு மாற்றப்படுவதால் இந்த செயல்திறனை கொரோனா வைரஸ்கள் பெறுகிறது. இதே போன்ற ஆற்றல் மற்ற கொரோனா வகை வைரஸ்களிலும் காணப்பட்டது எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com