கொரோனா நிவாரண நிதி; பிரதமருக்கு அறிவுறுத்திய சுப்பிரமணிய சுவாமி!!!
- IndiaGlitz, [Tuesday,April 07 2020]
கொரோனா தடுப்பு நிதிக்கான ஒதுக்கீட்டிற்கு அவசர சட்டத்தை கொண்டுவந்துள்ளார் பிரதமர் மோடி. அதன்படி பிரதமர், மத்திய அமைச்சர்கள், எம்.பிக்களின் ஊதியத்தை 30% குறைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு எம்.பிக்கள், மத்திய அமைச்சர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ள பா.ஜ.க வின் மூத்த பிரமுகர் சுப்பிரமணிய சுவாமி மேலும் சில அறிவுரைகளை பிரமருக்கு கூறியிருக்கிறார்.
அதில் “பாராளுமன்ற ஊழியர்களின் ஊதியத்தை 30% குறைத்துள்ளதை நான் பெரிதும் வரவேற்கிறேன். மேலும், இந்த சூழலில் ரூ.25 ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்டு வரும் புதிய பாராளுமன்ற கட்டுமானத்தை ஒருவருடத்திற்கு தள்ளி வைக்கவேண்டும் என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் பலர் தங்களது தனிப்பட்ட நிதியை அரசாங்கத்திற்கு வழங்கிவருகின்றனர்.
மேலும், மத்திய அரசு 1.70 லட்சம்கோடி நிதியை ஒதுக்கி பலக்கட்டங்களாக நிவாரணத் தொகையை வழங்க ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில், இது குறைவான நிதியாக இருக்கிறது எனப் பலத்தரப்புகளில் இருந்து குற்றச்சாட்டுகள் வந்தவண்ணம் இருக்கின்றன. ஒருபக்கம் கொரோனா நோய்த்தொற்றிண் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு பலத் திட்டங்களை தீட்டி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
I have welcomed the MPs’ pay cut by 30% for a year. I also think the Rs.25, 000 crores new Parliament building construction should be postponed for a year too.
— Subramanian Swamy (@Swamy39) April 6, 2020