கொரோனா நிவாரண நிதி!!! 1 லட்சம் பவுண்டுகளை வழங்கிய ஹாரிபாட்டர் எழுத்தாளர்!!!
- IndiaGlitz, [Tuesday,May 05 2020]
புகழ்பெற்ற ஹாரி பாட்டர் கதைகளை எழுதிய எழுத்தாளர் ஜே.கே ராவ்லிங் கொரோனா நிவராண நிதியாக 1 லட்சம் பவுண்டுகளை வழங்கியுள்ளார். இங்கிலாந்தில் வசித்துவரும் இவர், ஹாரிபாட்டர் நாவல்கள் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த நாவல்கள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டு பெரிய ஹிட்டை கொடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கொரோனா நிவாரண நிதியாக 1 லட்சம் பவுண்டுகளை இவர் அந்நாட்டு அரசுக்கு வழங்கியுள்ளார். இந்திய மதிப்பில் இத்தொகை ரூ.9.40 கோடியாகும். 54 வயதாக ஜே.கே. ராவ்லிங், இந்தி நிதியை கொரோனா வைரஸ் நிவாரணப் பணிகளுக்காகவும், அகதிகள் நலப்பணிகளுக்காகவும் பயன்படுத்த வேண்டும் எனக் கோட்டுக்கொண்டுள்ளார். கொரோனா பிரச்சனையால் பல குடும்பங்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றன. அவர்களுக்கு இந்த நிதியைப் பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஹாரி பாட்டர் கதைகளால் உலகம் முழுவதும் பிரபலமடைந்த எழுத்தாளராக அறியப்பட்ட ஜே.கே. ராவ்லிங் தனது தனிமை வாழ்க்கையைக் கடக்கவே இந்த நாவல்களை எழுதியதாகத் தனது தொடக்ககால எழுத்துப்பணி குறித்து அவர் தெரிவித்து இருந்தார். கடந்த மாதம் கொரோனா அறிகுறி இருப்பதாகவும் அதனால் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்த இவர் 2 வாரங்களுக்குப் பின்பு உடல் பெற்றதாக குறிப்பிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.