குணமாகி வீடு திரும்பியவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று..! திணறும் மருத்துவர்கள்.
- IndiaGlitz, [Friday,March 06 2020]
உலக அளவில் 70 நாடுகளில் கொரோனா வைரசானது பரவியுள்ளது. இதில் அதிகாரப்பூர்வமாக 98,00 பேர் வரை பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 3,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். சீனாவில் தொடங்கிய இந்த பாதிப்பானது 3 மாதங்களைக் கடந்த நிலையில் சீனாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது பலர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என் சீன அரசு தெரிவித்திருந்தது.
ஆனால்.. சீனாவின் வுஹான் மாகாணத்தில் 36 வயாதான லி லியாங் என்பவர் குணமாகிவிட்டதாக திருப்பி அனுப்பப்பட்டு 5 நாட்களுக்கு பிறகு இறந்துள்ளார். 13 நாட்கள் சிகிச்சையின் தீவிர கண்காணிப்பில் இருந்த அவர் உடலின் வெப்பநிலை கடைசி 3 நாட்கள் சரியாக இருந்துள்ளது. சீனாவானது குணமானவர்களையும் வீட்டுக்கு அனுப்பாமல் தனியாக ஹோட்டலில் வைத்தது கண்காணித்து வருகிறது. இந்நிலையில் லி லியாங்கிற்கு மார்ச் 2ம் தேதி திடீரென்று மொச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த அவர் இறந்துவிட்டதாக அவரது மனைவிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. நிமோனியாவால் ஏற்பட்ட நுரையீரல் பாதிப்பு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக சான்றிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை கேள்விப்பட்டு குணமாகி வீடு திரும்பியவர்கள் மீண்டும் வந்து பரிசோதனை செய்து பார்த்த போது அவர்களுக்கும் கொரோன தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாக மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். குணமாகி வெளியில் சென்றவர்கள் மூலம் மேலும் வைரஸானது பரவியிருக்கலாம் என அதிகாரிகள் அச்சப்படுகின்றனர்.
முழுமையாக குணமடையாமலே மருத்துவர்கள் வெளியில் நோயாளிகளை அனுப்பி விடுவதாக இணையத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. எப்படி முழுமையாக குணமாகும் அதற்கு எவ்வளவு நாள் ஆகும் என தெரியாமல் மருத்துவர்கள் குழம்பி நிற்பதால் இந்த வைரஸ் மக்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.