கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்குகிறது!!! உலக நாடுகளில் தாக்கம் எவ்வளவு???
- IndiaGlitz, [Thursday,April 02 2020]
ஐ.நா. சபையின் தலைவர் ஆண்டோனியோ குட்டரஸ் ஐ.நா சபை தோன்றியதில் இருந்து சந்திக்கும் முதல் மிகப்பெரிய சவால் கொரோனா வைரஸ் என நேற்றுக் குறிப்பிட்டு இருந்தார். மேலும், இரண்டாம் உலகப்போருக்குப்பின் உலகம் மிகப்பெரிய இக்கட்டான சூழலைச் சந்தித்து வருகிறது எனவும் குறிப்பிட்டார். தற்போது உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 93,170 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக உலகச்சுகாதார மையம், பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்குகிறது எனக்குறிப்பிட்டு, உலக நாடுகளுக்கு எச்சரிக்கையும் விடுத்திருந்தது. ஆனால் சீனாவை விட தற்போது பல ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை உலகம் முழுவம் கொரோனா பாதிப்பினால் 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்கா – பாதிப்பு எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது. இதுவரை உயிரிழப்பு 5,110 ஆக கணக்கிடப்பட்டு இருக்கிறது.
இத்தாலி – பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது. உயிரிழப்பு 13,155 ஆக கணக்கிடப்பட்டு இருக்கிறது.
ஸ்பெயின் தற்போது அபயாமான நிலைமை சந்தித்துவருகிறது. பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது. இறப்பு 9,387 ஆக பதிவுசெய்யப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சீனாவில் இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 81,554 ஆக பதிவாகியிருக்கிறது. உயிரிழப்பு 3,312.
ஜெர்மனியில் 77,981 பேர் வைரஸ்தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர். மேலும் உயிரிழப்பு 931 ஆக பதிவாகியிருக்கிறது.
பிரான்ஸில் தற்போது உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. 4,032 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பாதிப்பு எண்ணிக்கை 57 ஆயிரத்தை நெருங்கியிருக்கிறது.
ஈரானில் உயிரிழப்பு 3,036 ஆக உயர்ந்து இருக்கிறது. பாதிப்பு எண்ணிக்கை 47 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
ஐக்கிய அரபு நாடுகளில் 2,352 உயிரிழப்பும் பாதிப்பு எண்ணிக்கை 29,474 ஆகவும் பதிவாகியிருக்கிறது.
சுவிட்சர்லாந்தில் 17,768 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 488 ஆக உயர்ந்து இருக்கிறது.
தற்போது நெதர்லாந்தில் கொரோனா வைரஸால் உயிரிழப்பு அதிகரித்து காணப்படுகிறது. இதுவரை 1,173 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிப்பு 13,614 ஆக உயர்ந்து இருக்கிறது.
ஆஸ்திரியாவில் கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை 10,711 ஆக உயர்ந்து இருக்கிறது. உயிரிழப்பு 146 என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட நாடுகளைத் தாண்டி தற்போது 8 ஆயிரம் 9 ஆயிரம் பாதிப்பு கணக்குகளை கனடா, போர்ச்சுக்கல் வைத்திருக்கின்றன. 6 ஆயிரம் என்ற வரிசை கணக்கில் பிரேசில், இஸ்ரேல் நாடுகள் பாதிப்பு எண்ணிக்கையை வைத்திருக்கின்றன. ஆஸ்திரியாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தைத் தாண்டிய வரிசையில் ஆஸ்திரேலியா, சுவீடன், நார்வே ஆகிய நாடுகள் உள்ளன. 3 ஆயிரம் பாதிப்பு எண்ணிக்கை வரிசையில் Czechia, ஐயர்லாந்து, டென்மார்க், சிலி போன்ற நாடுகள் இருக்கின்றன. 2 ஆயிரம் பாதிப்பு வரிசையில் மலேசியா, ரஷ்யா, ஈக்வடார், போலந்து, ரொமானியா, ஜப்பான், Luxebourg, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இருக்கின்றன.
அடுத்தபடியாக இந்தியா, தாய்லாந்து, சவுதி அரேபியா, இந்தோனேசியா ஆகியவை 2000 எண்ணிக்கையை நெருங்கவுள்ளது. பின்லாந்து, கிரீஸ், தென் ஆப்பிரிக்கா, மெக்சிகோ, பெரு, பனாமா, குடியரசு நாடுகள், ஐஸ்லாந்து, அர்ஜெண்டினா, கொலம்பியா, செர்பியா, சிங்கப்பூர் போன்றவை 1500 க்கும் குறைவான எண்ணிக்கையில் தங்களது கணக்குகளை வைத்திருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.