கொரோனா பரவல் தடுப்பு: உலகின் எந்தெந்த நாடுகளில் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும்???
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களின் நீர்த்துளிகள் மூலம் பரவுகிறது. எனவே நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முகக்கவசம், கிருமிநாசினி பொருட்களைப் பயன்படுத்துமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்நிலையில் கொரோனாவில் இருந்து முகக்கவசம் காப்பாற்றுமா என்பதைக் குறித்து உலக நாடுகளிடையே முரண்பட்ட கருத்துகள் நிலவி வருகின்றன. உலகின் பெரும்பாலான நாடுகள் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்குகின்றன. பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணியாமல் சென்றால் சில நாடுகள் அபராதமும் விதிக்கிறது. ஆனாலும் ஒருசில மேற்கத்திய நாட்டு மக்கள் முகக்கவசம் அணிவதைத் தவிர்த்து வருகின்றன.
உலகச் சுகாதார நிறுவனம் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குமாறு உலக நாடுகளின் அரசாங்கத்தை வலியுறுத்தவில்லை. ஆனால் வயதானவர்கள் மற்றும் உடல் நிலை சரியில்லாதவர்கள் முகக்கவசத்தை அணியுமாறு வலியுறுத்தியிருக்கிறது. ஏனெனில் முகமூடிகள் அணிவதால் மட்டும் கொரோனாவில் இருந்து தப்பிக்க முடியாது. ஒருவர் பேசும்போதும், இருமல், தும்மல் போன்ற நேரங்களில் மட்டுமே முகக்கவசம் மிகுந்த பயனை அளிக்கின்றன. எனவே அடிக்கடி சோப்பு மற்றும் கிருமிநாசினிப்பொருட்களைக் கொண்டு கைகழுவதால் மட்டுமே கொரோனாவில் இருந்து தப்பிக்க முடியும் எனவும் WHO கூறியிருக்கிறது. மூக்கு, வாய், கண் போன்ற உறுப்புகளை கைகளால் தொடுவதையும் தவிக்குமாறு வலியுறுத்தியிருக்கிறது.
இத்தகைய வேறுபட்ட கருத்துகளால், வெறுமனே 50 விழுக்காடு உலக நாடுகளில் மட்டுமே முகக்கவசம் குறித்த கட்டுப்பாடுகள் காணப்படுகிறது. சிங்கப்பூர் மற்றும் United Kingdom போன்ற நாடுகள் தங்களது சுகாதாரப் பணியாளர்களுக்கு பாதுகாப்பான PPE உடைகள் மற்றும் முககவசத்தை வழங்கியுள்ளதால் மக்களுக்கு முககவசத்தை கட்டாயமாக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் கொரோனா நோய்த்தொற்று கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திவந்தாலும் தேசிய நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) அந்நாட்டில் முகக்கவசத்தை கட்டாயமாக்கவில்லை. நோய்த்தொற்றுக்கு எதிராக அறுவை சிகிச்சை முகமூடிகளைப் பயன்படுத்தாமல் துணி வகைகளாலான முகமூடிகளைப் பயன்படுத்துமாறு CDC கேட்டுக் கொண்டிருக்கிறது.
சீனா, தைவான் மற்றும் ஹாங்காங் போன்ற நாடுகளில் சாதாரண நாட்களிலே முகமூடிகள் அணியும் பழக்கம் அதிகமாக இருகக்கும். முந்தையை நோய்த்தொற்றின் (SARS, MERS) பாதிப்பினால் இந்தப் பழக்கம் அந்நாட்டு மக்களைத் தொற்றிக்கொண்டது. இதேபோன்று, சில நாடுகளில் முகமூடிகள் என்பது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.
வெனிசுலா- பொது வெளிகளில் முகமூடிகளைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும் என்பது வெனிசுலாவின் விதிமுறையாக இருந்து வருகிறது. வியட்நாம் – மார்ச் 16 ஆம் தேதியில் இருந்து வியட்நாம் முகமூடிகளைக் கட்டாயமாக்கி இருக்கிறது. செக் குடியரசு – முகக்கவசத்தை கட்டாயமாக்கிய முதல் ஐரோப்பிய நாடாக செக் குடியரசு திகழ்ந்து வருகிறது. மார்ச் 18 ஆம் தேதியில் இருந்து அந்நாட்டின் பொது வெளியில் செல்லும் மக்கள் அனைவரும் முகக்கவசத்தை அணிவது கட்டாயமாகும். ஸ்லோவாக்கியா – அந்நாட்டின் அதிபர் சுசானா கவுடோவா மார்ச் 25 இல் இருந்து முகக்கவசத்தை கட்டாயமாக்கியுள்ளார்.
போஸ்னியா – மார்ச் 29 ஆம் தேதியில் இருந்து இந்நாட்டில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. கொலாம்பியா – பொது போக்குவரத்து, சந்தைகள், வங்கிகள் போன்ற பொதுவெளிகளில் நடமாடும் மக்கள் ஏப்ரல் 4 ஆம் தேதியில் இருந்து முகக்கவசத்தை மக்கள் அணிந்து செல்கின்றனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – ஏப்ரல் 4 ஆம் தேதியில் இருந்து வீட்டிற்கு வெளியே முகக்கவசம் கட்டாயமாக்கியிருக்கிறது.
கியூபா - ஏப்ரல் 6 ஆம் தேதியில் இருந்து கியூபாவும் இதைப் பின்பற்றிவருகிறது. ஏப்ரல் 7 ஆம் தேதியில் இருந்து ஈக்வடார் இந்தக் கட்டுப்பாட்டை பின்பற்றுகிறது. ஏப்ரல் 6 ஆம் தேதியில் இருந்து ஆஸ்திரியா பொதுவெளிகளில் முகக்கவசத்தைக் கட்டாயமாக்கியது. ஏப்ரல் 7 ஆம் தேதியில் இருந்து மொராக்கோ முகமூடியை அணிவதைக் கட்டாயமாக்கியிருக்கிறது. மொராக்கோவில் இந்த விதிமுறையை கடைபிடிக்காவிட்டால் 3 மாதம் சிறை மற்றும் 1,300 திர்ஹாம் அபராதமும் விதிக்கப்பட்டு இருக்கிறது. ஏப்ரல் 7 ஆம் தேதியில் துருக்கி தன் நாட்டு மக்களுக்கு முகக்கவசத்தை அணிவதைக் கட்டாயமாக்கியிருக்கிறது. மேலும் துருக்கியில் ஒவ்வொரு வீட்டிற்கும் இலவசமாக முகக்கவசம் வழங்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 8 ஆம் தேதியில் இருந்து சால்வடோர் பொது இடங்களில் முகமூடிகளைக் கட்டாயமாக்கியிருக்கிறது. சிலியின் சுகாதார அமைச்சகமும் முகமூடிகளை கட்டாயமாக்கியிருக்கிறது. ஏப்ரல் 9 ஆம் தேதியில் இருந்து கேமரூன் முகக்கவசம் பற்றிய கட்டுப்பாடுகளை விதித்தது. அங்கோலா, பெனின், புர்கினா பாசோ, எக்குவடோரியல் கினியா, எத்தியோப்பியா, காபோன், கினியா, கென்யா, லைபீரியா, ருவாண்டா, சியரா லியோன் மற்றும் சாம்பியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளும் முகக்கவசத்தைக் கட்டாயமாக்கியிருக்கின்றன.
மேலும், நைஜீரியா, ஏப்ரல் 12 ஆம் தேதியில் இருந்து இஸ்ரேல், ஏப்ரல் 14 ஆம் தேதியில் இருந்து அர்ஜெண்டினா, ஏப்ரல் 16 ஆம் தேதியில் இருந்து போலந்து, ஏப்ரல் 20 ஆம் தேதியில் இருந்து லக்சம்பர்க், ஏப்ரல் 21 ஆம் தேதியில் இருந்து ஜமைக்கா ,ஏப்ரல் 22 ஆம் தேதியில் இருந்து ஜெர்மனி, பஹ்ரைன் போன்ற நாடுகளும்,ஏப்ரல் 26 ஆம் தேதியில் இருந்து கத்தார், மே 3 ஆத் தேதியில் இருந்து ஹொண்டுராஸ் போன்ற நாடுகளும் கட்டாயமாக்கி இருக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com