கொரோனா தடுப்பு: உடம்புல இதை மட்டும் குறையாம பாத்துக்கோங்க… எய்ம்ஸ் மருத்துவரின் முக்கிய ஆலோசனை!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி வரும் நிலையில் சுயப் பாதுகாப்பு மிகவும் அவசியமான ஒன்றாக மாறியிருக்கிறது. இந்நிலையில் கொரோனா வைரஸை எதிர்கொள்ள வைட்டமின் D மிகவும் அவசியமான ஒன்று என்பதை எய்ம்ஸ் மருத்துவமனையின் டாக்டர் உமா குமார் வலியுறுத்தி இருக்கிறார். கொரோனா வைரஸை தடுக்க வைட்டமின் D உதவாது என்றாலும் கொரோனா வைரஸை எதிர்கொள்ள இது மிகவும் அவசியமான ஒன்று எனக் குறிபிட்டு இருக்கிறார். பெரும்பாலும் இந்த வைட்டமின் D சூரிய ஒளியின் மூலம் கிடைக்கிறது. ஆனால் கொரோனா காலத்தில் பெரும்பாலான மக்கள் ஊரடங்கினால் வீட்டில் முடங்கிக் கிடக்கிறோம். இதனால் வைட்டமின் D உடலில் குறைய வாய்ப்பு இருக்கிறது. எனவே காலை மற்றும் மாலை வேளைகளில் சூரிய ஒளி படுமாறு பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம் எனக் கூறியுள்ளார்.
வைட்டமின் D குறைபாட்டினால் இருதய செயலிழப்பு போன்ற பாதிப்புகள் வருகின்றன. எனவே உடலில் இதன் அளவு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் கால்சியம் அளவினை அதிகரிப்பதிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இருதய செயலிழப்பு போன்ற குறைபாடுகள் வராமல் தடுக்கவும் வைட்டமின் D உடலில் போதிய அளவு இருக்க வேண்டும். கொரோனா பெருந்தொற்று நேரத்தில் சளி, இருமல் போன்ற தொல்லைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் வைட்டமின் D முக்கிய தேவையாக பார்க்கப்படுகிறது. பிரிட்டிஷ் தேசிய சுகாதார பாராமரிப்பு அமைப்பு மற்றும் அந்நாட்டின் தேசிய ஊட்டச்சத்து அறிவியல் ஆணையம் போன்றவை இங்கிலாந்து மக்களுக்கு ஊரடங்கு காலங்களில் 10 மைக்ரோ கிராம் அளவிற்கு வைட்டமின் D சப்ளிமெண்டரியை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இதுபோன்று மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமலும் சப்ளிமெண்டரியை எடுத்துக் கொள்ளக்கூடாது என டாக்டர் உமா அறிவுறுத்துகிறார்.
இங்கிலாந்தில் இந்த ஆண்டு முழுவதும் அந்நாட்டு மக்களுக்கு சப்ளிமெண்டரியை எடுத்துக்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. காரணம் பெரும்பாலான பனி பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு உடலில் இச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. மேலும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் போது இது பெரிய அபாயத்தையும் கொண்டு வரக்கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்தோனேசியாவின் ரெட்ரோஸ் பெக்டிவ் சார்ட் ஆய்வுக் குழுவினர் கொரோனா பாதித்தவர்களுக்கு உடலில் ஏற்கனவே வைட்டமின் D குறைபாடு இருந்தால் இறப்பு அதிகமாக நிகழும் என எச்சரித்து உள்ளனர். மேலும் கொரோனா சிகிச்சையில் வைட்டமின் D குறைபாடு இருப்பவர்களுக்கு அதிக சிரமம் ஏற்படுவதாகவும் விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.
ஸ்பெயின், இத்தாலி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் உள்ள மக்களுக்கு உடலில் வைட்டமின் D அளவு மிகவும் குறைவாக இருப்பதாக ஒரு ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. மேலும் போதிய அளவு வைட்டமின் D உடலில் இருக்கும்போது கொரோனா விஷயத்தில் அமிலேட், சைட்டோகைன், ஸ்ட்ரோமில் போன்ற பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் தடுக்க முடியும் எனவும் கூறப்படுகிறது. 20 க்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாடுகளில் வைட்டமின் D குறைபாடு இருப்பதாகவும் ஒரு ஆய்வுச் சுட்டிக் காட்டியது. இதனால் இறப்புகள் அதிகமாக இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அயர்லாந்து பொது சுகாதார அமைப்பு ஊரடங்கு காலத்திலேயே அந்நாட்டு மக்களுக்கு வைட்டமின் D சப்ளிமெண்டரியை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியது. இந்தியாவில் கடந்த ஆண்டுகளில் 50-90 விழுக்காடு மக்களுக்கு இந்தக் குறைபாடு இருந்ததாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. இதனால் கொரோனா நேரதில் வைட்டமின் D ஐ உடலில் அதிகரிக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தொற்று நோய் காலங்களில் வைட்டமின் D உடலில் அதிகளவு இருப்பதால் நோயில் இருந்து தப்பித்துக் கொள்வதோடு நோயை எதிர்க்கொள்ளவும் உதவும் எனவும் டாக்டர் உமா தெரிவிக்கிறார். ஆனால் கொரோனாவில் இருந்து முற்றிலும் தப்பிக்க இதுமட்டுமே ஒரே வழி என அவர் அறிவுறுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சமூக இடைவெளி, தனி நபர் பாதுகாப்பு போன்றவற்றை கடைபிடிக்குமாறு கேட்டுக் கொண்டு இருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments