இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கை: கடும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கும் ஹோமியோபதி மருந்து!!!!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த ஜனவரி 29 ஆம் தேதி இந்திய ஆயுஷ் அமைச்சகம் கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்கு ஹோமியோபதி மற்றும் யுனானி மருந்துகள் பெரிதும் உதவியாக இருக்கும் என்ற முடிவை வெளியிட்டது. அதோடு ஆர்செனிக் ஆல்பம் 30 என்ற ஹோமியோபதி மருந்து. கொரோனாவை தடுப்பதற்கு எளிமையான தடுப்பு மருந்தாகச் செயல்படும் எனவும் பரிந்துரை செய்தது. இந்த முடிவினை தமிழ்நாடு உள்ளிட்ட கர்நாடாகா, ஆந்திரா, கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் ஏற்றுக் கொண்டன. ஆனால், இந்த முடிவினை மகாராஷ்டிரா மாநில அரசு ஏற்றுக்கொள்ள வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. வைட்டமின் D போன்ற நோய் எதிர்ப்பு சக்தி மருந்தாகவே இதனைக் கணக்கில் எடுத்துக் கொண்டது.
இதைத்தவிர ஹரியாணா மாநிலத்தின் சிறைச்சாலைகளில் உள்ள கவாலர்கள் மற்றும் சிறை கைதிகளுக்கும் இந்த மருந்து வழங்கப்பட்டன. மும்பையின் சிறைகளிலும் இந்த மருந்து பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஹோமியோபதி மருந்தான ஆர்செனிக் ஆல்பம் 30 மருந்து கொரோனாவைத் தடுக்கும் என்பதற்கு எந்த அறிவியல் காரணமும் இல்லை என பல்வேறு மட்டங்களில் இருந்து விமசர்னங்கள் எழுந்திருக்கிறது. இந்த விமர்சனத்தை பல மாநில அரசுகள் வைத்து இருக்கின்றன என்பதுதான் முக்கியமான அம்சம். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இந்த மருந்தை கொரோனா தடுப்பு மருந்தாகப் பரிந்துரைக்க வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல உலகச் சுகாதார அமைப்பும் இந்த மருந்தைப் பற்றி எந்த பரிந்துரையையும் வெளியிட வில்லை. ஆனால் ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து சில மாநில அரசுகள் இந்த மருந்தை பயன்படுத்தி வருகின்றன.
ஆயுஷ் அமைச்சகம் ஆர்செனிக் ஆல்பம் 30 மருந்து பற்றி வெளியிட்ட அறிக்கையில் கொரோனாவை தடுப்பதற்கு இந்த மருந்து உதவியாக இருக்கும். தினமும் வெறும் வயிற்றில் தொடர்ந்து 3 நாட்களுக்கு அருந்தினால் போதும் என அறிவித்தது. மேலும் கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகரிக்கும்போது மீண்டும் இந்த மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தது. இதுகுறித்து WHO வின் தலைமை மருத்துவ நிபுணராக பாணியாற்றி வரும் டாக்டர் சௌமியா, “ஆர்செனிக் ஆல்பம் 30 என்ற ஹோமியோபதி மருந்து கொரோனாவை தடுக்கும் எனச் சொல்வதில் எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை” என்று குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் இந்திய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் சில ஹோமியோபதி விஞ்ஞானிகள் இந்த மருந்தைப் பரிந்துரை செய்து வருகின்றனர். இதனால் மருந்து கடைகளில் ஸ்டாக் தீர்ந்து போகும் அளவிற்கு 3 மடங்கு விலையும் கொடுத்து மக்கள் வாங்கி செல்லும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
தற்போது வரை மகாராஷ்டிரா மாநில அரசு இது ஒரு முற்காப்பு மருந்தாகச் செயல்படும் என்றே மக்களிடம் கூறிவருகிறது. ஒருபோதும் மகாராஷ்டிரா அரசு தடுப்பு மருந்து என்ற வார்த்தையைப் பயன்படுத்த வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆர்செனிக்கை காய்ச்சி வடிக்கட்டுவதன் மூலம் இந்த மருந்து தயாரிக்கப்படுகிறது. ஆர்செனிக்கை அதிக அளவில் பயன்படுத்துவதால் பக்க விளைவுகள் ஏற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த ஹோமியோபதி மருந்தில் 1% க்கும் குறைவான அளவில் ஆர்செனிக் பயன்படுத்தப் பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது, பல மாநில அரசுகள் இந்த மருந்தைக் குறித்து விவாதத்தை எழுப்பியுள்ள நிலையில் இந்திய ஹொமியோபதி ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் இது காய்ச்சலுக்கு எதிராக வேலை செய்யும். ஆனால், கொரோனாவை தடுக்கும் எனக் கூறுவதற்கான எந்த அறிவியலும் இதில் இல்லை என்ற முடிவை வெளியிட்டு இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை மார்ச் 6 ஆம் தேதி வரை 5 கொரோனா நோயாளிகள் மட்டுமே இருந்தனர். ஆனால் இன்றைக்கு நிலைமையே வேறு. இப்படி அதிகரித்து வரும் கொரோனா பரவல் எண்ணிக்கைக்கு மத்தியில் உறுதிப்படுத்தப் படாத மருந்தை மக்களிடம் பரிந்துரை செய்ய வேண்டாம் எனவும் சில விஞ்ஞானிகள் எதிர்ப்பு குரல் கொடுத்து வருகின்றனர். காரணம் மும்பையில் சில மக்கள் இந்த மருந்தை எடுத்துக் கொண்ட தைரியத்தில் மிகச் சாதாரணமாக வெளியே சென்று வருகின்றனர். இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்க வேண்டும் என்றும் சில மருத்துவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
காலாரா, டிப்தீரியா, இன்ஃப்ளூயன்ஸா, மஞ்சள் காமாலை, ஸ்பானிஷ் காய்ச்சல் போன்ற நோய்த்தொற்றுகளின் போது WHO சில ஹோமியோபதி மருந்துகளை துணை மருந்துகளாக அறிவித்து இருந்தது. அதைப்போல தற்போது, ஆயுஷ் அமைச்சகம் தனது அறிவிப்பில் இது இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய்த்தொற்றில் மிகவும் உதவியாக இருந்தது எனவும் குறிப்பிட்டு இருக்கிறது. ஆர்செனிக் ஆல்பம் 30 என்ற மருந்து அடிப்படையில் காய்ச்சலுக்கு எதிராக செயல்படும் ஒரு ஹோமியோபதி தன்மையிலானது. இது கொரோனாவில் பயன்படும் எனச் சொல்வதற்கு அறிவியல் காரணங்கள் எதுவும் இல்லை என்பதை விஞ்ஞானிகள் தெளிவு படுத்தியிருக்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments