ஆன்லைனில் தந்தூரி சிக்கன் ஆர்டர் செய்த கொரோனா நோயாளிகள்: மருத்துவர்கள் அதிர்ச்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவ மருத்துவமனைகளில் தனி வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் சிலரின் அட்டகாசம் தாங்க முடியாமல் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் தவித்து வருவதாக செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா தனி வார்டில் சிகிச்சை பெற்று வரும் 4 பேர் ஆன்லைனில் தந்தூரி சிக்கன் ஆர்டர் செய்து சிக்கனை வரவழைத்து சாப்பிட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு மருத்துவமனையிலிருந்து சத்தான உணவுகள் தற்போது தந்து கொண்டிருக்கும் நிலையில் அசைவ பிரியர்களான நான்கு கொரோனா நோயாளிகள் இணைந்து ஆன்லைனில் தந்தூரி சிக்கன் ஆர்டர் செய்தது மருத்துவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதுகுறித்து மருத்துவர்கள் நோயாளிகளிடம் தொடர்ந்து அறிவுரையும் கூறி வருகின்றனர். இருப்பினும் கொரோனா நோயாளிகள் தாங்கள் தனி வார்டில் சிகிச்சை பெறுவதையே மறந்துவிட்டு விருந்தாளிகள் போல் நடந்துகொள்வதாக மருத்துவர்கள் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments