ஆன்லைனில் தந்தூரி சிக்கன் ஆர்டர் செய்த கொரோனா நோயாளிகள்: மருத்துவர்கள் அதிர்ச்சி

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவ மருத்துவமனைகளில் தனி வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் சிலரின் அட்டகாசம் தாங்க முடியாமல் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் தவித்து வருவதாக செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா தனி வார்டில் சிகிச்சை பெற்று வரும் 4 பேர் ஆன்லைனில் தந்தூரி சிக்கன் ஆர்டர் செய்து சிக்கனை வரவழைத்து சாப்பிட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு மருத்துவமனையிலிருந்து சத்தான உணவுகள் தற்போது தந்து கொண்டிருக்கும் நிலையில் அசைவ பிரியர்களான நான்கு கொரோனா நோயாளிகள் இணைந்து ஆன்லைனில் தந்தூரி சிக்கன் ஆர்டர் செய்தது மருத்துவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதுகுறித்து மருத்துவர்கள் நோயாளிகளிடம் தொடர்ந்து அறிவுரையும் கூறி வருகின்றனர். இருப்பினும் கொரோனா நோயாளிகள் தாங்கள் தனி வார்டில் சிகிச்சை பெறுவதையே மறந்துவிட்டு விருந்தாளிகள் போல் நடந்துகொள்வதாக மருத்துவர்கள் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

More News

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1 லட்சத்து 6 ஆயிரம் புதிய கொரோனா நோயாளிகள்: WHO அதிர்ச்சி!!!

கடந்த 24 மணிநேரத்தில் உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 6 ஆயிரமாக பதிவாகி இருப்பதாக

24 மணி நேரத்தில் 5609 பேர் பாதிப்பு: இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று 1,06,750ஆக இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 5609 பேர் புதியதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால்

கிராமத்தில் விவசாயியாக மாறிய பிரபல ஹீரோ!

தமிழ் திரை உலகில் 'மதயானைகூட்டம்' என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி அதன் பின்னர் 'கிருமி' 'விக்ரம் வேதா' உள்பட ஒரு சில படங்களில் நடித்த நடிகர் கதிருக்கு கோலிவுட்

எப்படி இருக்கான் உன் ஆளு? 'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்

சிம்பு, த்ரிஷா நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த 'விண்ணை தாண்டி வருவாயோ' படத்தை யாரும் மறக்க முடியாது. கார்த்திக், ஜெஸ்ஸி கேரக்டர்கள் நம் மனதிற்குள்ளே இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும்

சென்னையில் இன்றும் 500ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் எத்தனை பேர்?

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களை தமிழக சுகாதாரத்துறை தினந்தோறும் அறிவித்து வரும் நிலையில்