சுவர் ஏறி குதித்து புரோட்டா வாங்க சென்ற கொரோனா நோயாளி: கொரோனா வார்டில் பரபரப்பு

கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த கொரனோ நோயாளி ஒருவர் சுவர் ஏறி குதித்து புரோட்டா வாங்க சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் என்ற பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் அரசு மருத்துவமனையில் இடம் இல்லாததால் அருகில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த கொரோனா முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று பள்ளியை ஒட்டியுள்ள வீட்டின் வழியாக அந்த நோயாளி சுவர் ஏறி குதித்து சென்ற காட்சி சிசிடிவி காட்சியின் மூலம் தெரியவந்தது. இதனை அடுத்து அந்த நோயாளியை விசாரித்தபோது சுவர் ஏறி குதித்து கடைக்கு சென்று புரோட்டா வாங்கி வந்தது தெரியவந்தது இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து அவர் புரோட்டா வாங்கிய கடைக்காரர் உள்பட ஒருசிலரை தனிமைப்படுத்த சுகாதாரத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.. கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் கொரோனா வார்டில் இருந்து சுவர் ஏறி குதித்து புரோட்டா வாங்கச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.