கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற சென்னை நபர் திடீர் மாயம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வரும் நிலையில் நேற்று மட்டும் 771 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது நபர் திடீரென மாயமாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 60 வயது நபர் ஒருவர் கடந்த 29ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு கொரோனா வார்டில் இருந்து திடீரென அவர் தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் புகார் அளித்த நிலையில் மாயமான நபரை தேடும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிரமாக உள்ளனர்.
இந்த நிலையில் அதே ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 48 வயது பெண் ஒருவர் இன்று காலை உயிரிழந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. சென்னை ஈக்காட்டுதாங்கலை சேர்ந்த அந்த பெண் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout