சென்னையில் 4 ஆவது மாடியில் இருந்து குதித்து கொரோனா நோயாளி தற்கொலை… பரபரப்பு காரணம்!!!

  • IndiaGlitz, [Monday,November 23 2020]

 

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் 4 மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வளசரவாக்கத்தைச் சேர்ந்த சந்திரசேகர் (54). இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா உறுதிச் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில் நேற்றுக் காலை திடீரென இவர் காணாமல் போய் இருக்கிறார். இதனால் அதிர்ந்து போன அவரது மனைவி அந்த மருத்துவமனை முழுவதும் தேடி அலைந்து இருக்கிறார். பின்னர் மருத்துவமனையில் பின்பகுதியில் இவர் உயிரிழந்து கிடப்பது தெரிய வந்திருக்கிறது.

இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து தற்போது விசாரணை செய்து வருகின்றனர். அதன் முதற்கட்ட விசாரணையில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்த சந்திரசேகர் கடுமையான மனஅழுத்தத்தில் இருந்ததாகவும் இதன் காரணமாக அம்மருத்துவமனையின் பின்புறத்திற்கு சென்ற அவர் 4 மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த உயிரிழப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

More News

உங்களுக்கு பெரும் புகழ் கிடைக்கும்: தமிழ் நடிகரை வாழ்த்திய் துணை முதல்வர் ஓபிஎஸ்!

உங்களுக்கு இந்த படத்தினால் பெரும் புகழ் கிடைக்கும் என துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தமிழ் நடிகர் ஒருவரை வாழ்த்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

'ராட்சசன்' இயக்குனருடன் தனுஷ் இணையும் படம்: ஒரு ஆச்சரிய தகவல்

விஷ்ணு விஷால் நடிப்பில் ராம்குமார் இயக்கிய 'ராட்சசன்' திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே

நிலாவுக்கு ஆளில்லா விண்கலம் அனுப்பி பூமிக்குக் கற்களைக் கொண்டுவரும் முயற்சி!!!

நிலாவில் அமெரிக்கா, ரஷ்யா போன்ற சில நாடுகள் மட்டும் தொடர்ந்து தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.

மாலத்தீவுக்கு நீங்களும் போயிட்டீங்களா? சமந்தாவின் அசத்தல் புகைப்படங்கள் 

கடந்த சில நாட்களாக மாலத்தீவில் தமிழ் நடிகைகள் குவிந்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. ஏற்கனவே தேனிலவு கொண்டாட தனது கணவருடன் காஜல் அகர்வால் சென்றதை அடுத்து நடிகைகள் பிரணிதா சுபாஷ்,

லம்பாடி இனத்தில் இருந்து முதல் பெண் மருத்துவர்… குவியும் பாராட்டு!!!

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மருத்துவப் படிப்பு மிகவும் போற்றத்தக்க ஒன்றாக இருந்து வருகிறது.