11 மாநிலங்களில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா எண்ணிக்கை விகிதங்கள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் மார்ச் 1 அன்று வெறுமனே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆக இருந்தது. ஒரு மாதத்தில் தற்போது 4 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது. இந்தப் பாதிப்பு எண்ணிக்கைக்கு அதிகரிப்புக்கு டெல்லி தப்ளிக் ஜமாத் மாநாடு காரணமாகச் சொல்லப்பட்டாலும் அதற்கு முன்பிருந்தே பல மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை இருக்கத்தான் செய்தது. அப்படி 11 மாநிலங்களில் காணப்பட்ட பாதிப்பு பட்டியல் தற்போது அதிகரிக்கும் விகதங்களிலும் தொடந்து முன்னிலை வகிக்கிறது.
இந்தப் பட்டியலில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, தெலுங்கானா, கேரளா, ராஜஸ்தான், உத்திரபிரதேசம், ஆந்திரபிரதேசம், குஜராத், கர்நாடகா, மத்தியப்பிரதேசம் ஆகியவை தொடர்ந்து முன்னிலை இடத்தையே வகிக்கின்றன. டெல்லி நிகழ்வுக்கு முன்னரும் இம்மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. தற்போது அதிகரித்து வரும் எண்ணிக்கையிலும் இந்த மாநிலங்கள் தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த 11 மாநிலங்களில் மட்டும் 86 விழுக்காடு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது எனத் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் முதல் ஆயிரம் பாதிப்பு எண்ணிக்கையைத் தொட்டபோது இந்த 11 மாநிலங்களில் 81.54% பாதிப்பு இருந்தது எனத் தற்போது கணிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தொடும்போது இந்த விகிதம் 85.21% ஆகவும், பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தொட்டபோது இந்த விகிதம் 84.33% ஆகவும், தற்போது 4 ஆயிரத்தைத் தாண்டியிருக்கும் நிலையிலும் இந்த விகிதம் அதிகரித்தே காணப்படுகிறது. பாதிப்பு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே இந்த 11 மாநிலங்கள் முன்னிலை வகித்து வரும் நிலையில் தற்போது ஹரியாணா, ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளில் பாதிப்பு அதிகரித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout