சென்னையில் சரசரவென சரியும் கொரோனா எண்ணிக்கை!!! விரைவில் விடிவுவரும் என நம்பிக்கை!!!

 

கடந்த சில மாதங்களாக கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித்தவித்த சென்னை மாநகரம் தற்போது குறைந்த அளவிலான பாதிப்புகளை மட்டுமே கொண்டிருக்கிறது என சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்து இருக்கிறது. சென்னையில் கடந்த சில மாதங்களாக பல ஆயிரக்கணக்காக இருந்த கொரோனா நோய்த்தொற்றின் எண்ணிக்கை தற்போது ஒரு ஆயிரத்தில் வந்து நின்றிருக்கிறது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து தற்போது சென்னை மாநகரம் சற்று நிம்மதியைப் பெற்றிருப்பதாகவும் எனவும் கூறப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி சென்னையில் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை 1,065 ஆக பதிவாகியிருந்தது. தொற்றைவிட குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,303 என அதிகரித்து இருப்பதும் தற்போது புது நம்பிக்கை ஏற்படுத்துகிறது.

இதுவரை சென்னை மாநகரத்தில் 1,01,951 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். அவர்களில் 87,604 பேர் முற்றிலும் குணமடைந்துள்ளனர். சென்னையில் நேற்றைய நிலைமையைப் பொறுத்தவரையில் 12,190 பேர் மட்டுமே மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவதுவரை உயிரிழப்பு 2,157 எனவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் சென்னைப் பகுதிகளில் தொற்றைவிட குணமடைவோரின் எண்ணிக்கை சரிந்து கொண்டே வருவதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்து இருக்கிறது. நேற்று காலையில் 12,436 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை மாலையில் 12,190 ஆக குறைந்து இருக்கிறது. இந்த எண்ணிக்கையில் மேலும் மாற்றங்கள் வரும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் அம்பத்தூர் பகுதிகளில் 22 விழுக்காட்டு நோயாளிகள், மாதவரம் பகுதியில் 20 விழுக்காட்டு நோயாளிகள், கோடம்பாக்கத்தில் அதிகப்பட்சமாக 1,511 பேர், அண்ணாநகர் பகுதியில் 1,327 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருக்கிறது. தேனி, கன்னியாகுமரி மாவட்டத்தின் பாதிப்பை விட தற்போது சென்னையின் பாதிப்பு குறைந்து இருப்பது குறித்து பலரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

சென்னை மட்டுமல்ல தற்போது ஒட்டுமொத்த தமிழகத்திலும் குணமடைந்து வருவோரின் எண்ணிக்கை இரட்டை மடங்காக அதிகரித்து இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது. நேற்றைய நிலவரப்படி ஒட்டுமொத்த தமிழகத்திலும் நோய்த்தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 5,875 ஆக இருக்கிறது. அதைப்போலவே குணமடைவோரின் எண்ணிக்கை 5,517 ஆக இருந்தது. மேலும் தமிழகத்தின் ஒட்டுமொத்த பாதிப்பின் எண்ணிக்கை 2,57,613 ஆக இருக்கிறது. இதில் 1,96,483 பேர் முற்றிலும் குணமடைந்து உள்ளனர். தற்போதைய நிலைமையில் 56,998 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

மற்றொரு விபரீதம்… போதைக்காக சானிடைசரில் தண்ணீர் கலந்து குடித்து 3 பேர் உயிரிழப்பு…

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் சாராயத்தில் சானிடைசரை கலந்து குடித்தால் 19 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

13 வயது சிறுவனை 2 வருடங்களாக பாலியல் டார்ச்சர் செய்த 31 வயது பெண்: போக்சோவில் கைது! 

13 வயது சிறுவனை இரண்டு வருடங்களாக 31 வயது விதவை பெண் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் அந்த பெண்ணை கைது செய்து போக்சோ ச

கள்ளக்காதலிக்கு ஜிமிக்கி வாங்க வாலிபர் செய்த திருட்டு: சிசிடிவியால் சிக்கியதால் பரபரப்பு

மனைவி குழந்தைகளை ஊருக்கு அனுப்பிவிட்டு கள்ளக்காதலிக்கு ஜிமிக்கி, கம்மல் வாங்குவதற்காக சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபட்ட சென்னை வாலிபர் ஒருவர் சிசிடிவி வீடியோவால் சிக்கியுள்ள சம்பவம்

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படாது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி

மத்திய அரசு சமீபத்தில் புதிய கல்விக் கொள்கை திட்டத்தை அறிவித்த நிலையில் இந்த திட்டத்திற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் 

மறுபடியும் நிலநடுக்கம்… நிலைகுலைந்து போன பப்புவா நியூ கினியா!!!

இந்தோனேசியாவிற்கு அருகில் இருக்கும் தீவு நாடான பப்புவா நியூ கினியாவிற்கு அடிமேல் அடி விழுந்து கொண்டே இருக்கிறது