சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு கொரோனா வராதா???
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் கடந்த சில தினங்களாக “சைவ உணவு சாப்பிடுகிறவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதில்லை” என்ற தகவல் சமூக வலைத் தளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இப்படி பரவும் தகவல்களுக்கு அதிக லைக்குகளும் ஷேர்களும் கிடைக்கிறது. இதைத்தவிர, சில முக்கிய பிரபலங்களும் இதுபோன்ற கருத்துகளை கூறுவதால் தற்போது உண்மை நிலவரம் குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் பரவல் முறை குறித்து கடந்த நான்கு மாதங்களாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தாலும் அந்தத் தகவல்கள் இன்னும் விழிப்புணர்வை ஏற்படுத்தவே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் கொரோனா வைரஸ் பரவல் குறித்தும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளை இன்னும் மக்கள் நம்பிக் கொண்டுதான் வருகின்றனர். அந்த வகையில் தற்போது சைவ உணவு சாப்பிடுகிறவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவாது என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. “கொரோனா வைரஸ் ஒரு விலங்கில் இருந்து பரவியது, எனவே அது மனித உடலில் வாழ்வதற்குத் தேவையான கொழுப்பு அவசியம். மாமிசம் சாப்பிடாத சைவர்களை அந்த வைரஸ் தாக்காது” என்பது போன்ற தகவல்களை 34 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பகிர்ந்து கொண்டு இருக்கின்றனர்.
இதைத்தவிர “சைவ உணவு சாப்பிடுகிறவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவது இல்லை” என்று WHO கூறியதாகவும் ஒரு வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இதுபோன்ற தவறான கருத்துகளுக்கு எதிராக சில மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அதன்படி கொரோனா வைரஸ் பரவல் சைவ உணவு சாப்பிடுகிறவர்களுக்கு பரவாது எனச் சொல்வதற்கு போதுமான ஆதாரம் எதுவும் இல்லை. மேலும், கைகடிகாரம், பெல்ட், கண்ணாடி போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout