சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு கொரோனா வராதா???

  • IndiaGlitz, [Monday,May 25 2020]

 

இந்தியாவில் கடந்த சில தினங்களாக “சைவ உணவு சாப்பிடுகிறவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதில்லை” என்ற தகவல் சமூக வலைத் தளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இப்படி பரவும் தகவல்களுக்கு அதிக லைக்குகளும் ஷேர்களும் கிடைக்கிறது. இதைத்தவிர, சில முக்கிய பிரபலங்களும் இதுபோன்ற கருத்துகளை கூறுவதால் தற்போது உண்மை நிலவரம் குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல் முறை குறித்து கடந்த நான்கு மாதங்களாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தாலும் அந்தத் தகவல்கள் இன்னும் விழிப்புணர்வை ஏற்படுத்தவே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் கொரோனா வைரஸ் பரவல் குறித்தும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளை இன்னும் மக்கள் நம்பிக் கொண்டுதான் வருகின்றனர். அந்த வகையில் தற்போது சைவ உணவு சாப்பிடுகிறவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவாது என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. “கொரோனா வைரஸ் ஒரு விலங்கில் இருந்து பரவியது, எனவே அது மனித உடலில் வாழ்வதற்குத் தேவையான கொழுப்பு அவசியம். மாமிசம் சாப்பிடாத சைவர்களை அந்த வைரஸ் தாக்காது” என்பது போன்ற தகவல்களை 34 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பகிர்ந்து கொண்டு இருக்கின்றனர்.

இதைத்தவிர “சைவ உணவு சாப்பிடுகிறவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவது இல்லை” என்று WHO கூறியதாகவும் ஒரு வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இதுபோன்ற தவறான கருத்துகளுக்கு எதிராக சில மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அதன்படி கொரோனா வைரஸ் பரவல் சைவ உணவு சாப்பிடுகிறவர்களுக்கு பரவாது எனச் சொல்வதற்கு போதுமான ஆதாரம் எதுவும் இல்லை. மேலும், கைகடிகாரம், பெல்ட், கண்ணாடி போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளனர்.

More News

அச்சமூட்டும் வெட்டுகிளிகளின் படையெடுப்பு: தாக்குதலுக்கு எதிராக இந்தியா-பாகிஸ்தான் கூட்டணி அமைக்கிறதா???

ஆண்டுதோறும் இந்திய எல்லைப் பகுதிகளுக்கு அருகே இருக்கும் பாகிஸ்தான் மாநிலங்களில் இருந்து பாலைவன வெட்டிக்கிளிகள் கூட்டம் கூட்டமாக படையெடுப்பது வழக்கம்

இந்தியாவின் முதல் பெண் ரேஸ் சாம்பியனுக்கு புதிய பதவி

இந்தியாவின் முதல் பெண் பைக் ரேஸ் சாம்பியன் அலிஷா அப்துல்லாவுக்கு தமிழகத்தில் ஒரு உயர்ந்த பதவியை NHRACACB என்ற அமைப்பு அளித்துள்ளது.

இந்த நாளில் இந்தியர் என இணைவோம்: கமல்ஹாசன் டுவீட்

உலகம் முழுவதும் இஸ்லாமிய பெருமக்கள் இன்று ஈகைத் திருநாளான ரம்ஜான் திருநாளை கொண்டாடி வருகின்றனர். இன்று ரம்ஜான் கொண்டாடி வரும் இஸ்லாமியர்களுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி,

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி உடலுறவு கொண்டால் அது பலாத்காரம் இல்லை: ஐகோர்ட் தீர்ப்பு

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஒரு பெண்ணின் சம்மதத்துடன் உடலுறவு கொண்டால் அது பலாத்காரம் ஆகாது என ஒரிசா மாநில ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கம்பட்டி ராஜாவுக்கு சீமராஜா சிவகார்த்திகேயன் இரங்கல்

சுதந்திர இந்தியாவில் பட்டம் கட்டிய கடைசி மன்னர் நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி அவர்கள் நேற்று காலமானார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.