கொரோனாவுக்கு மத்தியில் இப்படியொரு கொடுமையா??? கலக்கத்தில் மெக்சிகோ!!!
- IndiaGlitz, [Wednesday,June 24 2020]
கொரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இன்னொரு பக்கம் இயற்கை பேரிடர்களும் உலகத்தை அச்சுறுத்தி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெற்கு சீனாவில் பெய்த கடும் மழையால் 60 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். பல்லாயிரக் கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் நாசமாகியது. இந்தியாவின் ஏற்பட்ட ஆம்பன் புயலால் பல மாநிலங்கள் மோசமாக பாதிக்கப் பட்டன. சில வாரங்களுக்கு முன்பு மும்பையில் ஏற்பட்ட சூறாவளி புயலால் கடற்கரை கட்டிடங்கள், மலைப் பகுதிகளில் நிலச்சரிவு போன்றவை ஏற்பட்டது. இந்தியாவின் கிழக்கு மாநிலங்களான மணிப்பூர், அசாம் பகுதிகளில் பெய்யும் கன மழையால் நிலச்சரிவும் ஏற்பட்டது. இப்படி ஒவ்வொரு நாட்டிலும் பல இக்கட்டான இயற்கை பேரிடர்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்நிலையில் மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரபட்டதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தெற்கு மெக்சிகோவில் 7.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்தப் பாதிப்பால் 6 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. பல கட்டிங்கள் சேதமடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. தெற்கு மெக்சிகோவில் உள்ள ஓக்ஸாக்கா மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு இருக்கிறது. நிலநடுக்கம் ஏற்படுத்திய பாதிப்பை அந்நாட்டின் பேரிடர் மீட்புக்குழு தற்போது சரிசெய்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதைப்போன்று கடந்த 2017 ஆம் ஆண்டும் இரண்டு வாரத்திற்குள் இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு 100 க்கும் மேற்பட்டோர் உயிந்ததாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அந்நாட்டில் கொரோனா நோய்த்தொற்றின் எண்ணிக்கையும் கிடுகிடு வென உயர்ந்து கொண்டே வருகிறது. இதுவரை 19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும் உயிரிழப்புகள் 23 ஆயிரத்தைத் தாண்டி சென்றிருக்கிறது. ஏற்கனவே கொரோனா உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் மெக்சிகோவிற்கு இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையா என்று தற்போது பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.