எய்ட்ஸ் நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்போய் கொரோனா கசிந்தது… நோபல் பரசுபெற்ற விஞ்ஞானி கருத்து!!!

பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற மருத்துவர் லூக் மாண்டாக்னியர் கொரோனா வைரஸ் வுஹான் நகரத்து ஆய்வகத்தில் இருந்து வெளியானது எனக் கருத்து தெரிவித்து இருக்கிறார். எய்ட்ஸ் வைரஸ்க்கு எதிராக தடுப்பூசி சோதனையில் இந்த வைரஸ் வெளியானதாக மருத்துவர் லூக் கருத்து தெரிவித்து இருப்பது தற்போது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

சீனாவில் உள்ள வுஹான் மாகாணத்தில் மத்திய வைரலாஜி ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. இந்த ஆராய்ச்சி மையத்தில் 1990 களில் இருந்து பல்வேறு தடுப்பூசி மற்றும் வைரஸ் நோய்களுக்கான ஆய்வுகள் நடந்து வருகின்றன. கொரோனா குடும்பத்தைப் பற்றிய ஆராய்ச்சிகளும் அந்த ஆய்வு மையத்தில் நடத்தப்படுகிறது. இத்தகைய காரணங்களை வைத்துக் கொண்டுதான் உலக நாடுகள் முழுக்க சீனாவில் வுஹான் மாகாணத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இருந்தே இந்த புதிய கொரோனா வைரஸ் உருவாகியிருப்பதற்கான சாத்தியங்கள் உண்டு என விமர்ச்சித்து வந்தன.

ஆனால் Scripps Research Scientists, சீனா ஆராய்ச்சி, பிரெஞ்சு ஆராய்ச்சி எனப் பலத்தரப்புகளில் இருந்து இந்த புதிய கொரோனா நாவல் வைரஸ் உருவாக்கப்பட்ட ஒன்றல்ல, அது தானாக பரிணாமம் பெற்றது எனவும் வௌவாலில் நோய் ஏற்படுத்தும் கிருமிதான் இந்த கொரோனா வைரஸ் எனவும் தெளிவுபடுத்தியிருந்தன.

இந்நிலையில், எய்ட்ஸ் நோயை ஏற்படுத்தும் எச்.ஐ.வி வைரஸை கண்டுபிடித்த மருத்துவர் லூக் மாண்டாக்னியர் கொரோனா வைரஸ் வுஹான் நகரத்து ஆய்வகத்தில் இருந்து வெளியானது எனக் கருத்துத் தெரிவித்து இருக்கிறார். முதன் முதலில் எய்ட்ஸ் நோயை ஏற்படுத்தும் எச்.ஐ.வி. வைரஸை இவர்தான் கண்டுபிடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதற்காக 2008 இல் நோபல் பரிசும் பெற்றார்.

கொரோனா வைரஸ் குறித்து பேசிய மருத்துவர் லூக், கொரோனா வைரஸின் மரபணுக்களில் எச்.ஐ.வி கூறுகள் இருப்பதாகவும் மலேரியாவின் கிருமிகள் இருப்பதாகக் கூட சந்தேகப்படுவதாகவும் கருத்து தெரிவித்து இருக்கிறார். வுஹாணில் உள்ள மத்திய வைராலஜி ஆய்வு மையம் 2000 த்திற்கு முன்பிருந்தே வைரஸ்களுக்கான ஆய்வுகளில் நிபுணத்துவம் பெற்றது. இந்த ஆய்வு மையத்தில் எய்ட்ஸ் நோய்க்கான மருந்து கண்டுபிடிப்பது பற்றிய சோதனையும் நடந்து வந்தது. மலேரியா, கொரோனா வைரஸ் போன்ற வைரஸ் கிருமிகளை வைத்து எய்ட்ஸ்க்கான சோதனை நடத்தப்பட்டு வந்தன. இந்த சோதனையில் இருந்து கொரோனா தோன்றியிருக்கலாம் எனத் தற்போது மருத்துவர் லூக் புதிய கோணத்தில் கருத்து தெரிவித்து இருக்கிறார்.

கொரோனா பரவலைப் பற்றி பலத் தரப்புகளில் இருந்து பலவிதமான கருத்துகள் வெளியாகி இருந்தன. அதில் அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப் சீனாவின் ஆய்வகங்களில் இருந்து பரவியது, அரசியல் நோக்கத்தோடு செய்யப்பட்டது எனவும் கூறியிருந்தார். உற்பத்தி செய்யப்பட்ட வைரஸ் என்கிற ரீதியில் Foxs News கருத்து வெளியிட்டு இருந்தது. இதுதவிர, சீனாவின் வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பயிற்சியாளரால் கொரோனா வைரஸ் தற்செயலாக கசிந்திருக்கலாம். மேலும், வௌவால்களைக் குறித்து ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்ட போது அங்கு பணிபுரியும் ஒருவர் கொரேனாவால் பாதிக்கப்பட்டார் எனவும் விமர்சனம் வைக்கப்பட்டது.

இத்தகைய உறுதிப்படுத்தப்படாத கருத்துகளுக்கு மத்தியில் தற்போது நோபல் பரிசு பெற்ற மருத்துவர் லூக் மாண்டாக்னியர் கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் இருந்து கசிந்தது தான் எனவும் எய்ட்ஸ்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் படுவதற்காக நடத்தப்பட்ட சோதனையில் இந்த வைரஸ் வெளியாகி இருக்கலாம் எனவும் சந்தேகத்தை கிளப்பியிருக்கிறார். மருத்துவரின் கருத்துப்படி கொரோனா வைரஸில் எய்ட்ஸ் வைரஸ்க்கான கூறுகள் மற்றும் மலேரியாவுக்கான மரபணு கூறுகள் அடங்கியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

வடகொரியா அதிபருக்கு அறுவை சிகிச்சை: உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்

அமெரிக்காவுடன் அணு ஆயுத சோதனை விவகாரத்தில் அவ்வப்போது மோதி வரும் வடகொரியா அதிபருக்கு சமீபத்தில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் இதனையடுத்து அவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும்

ராகவா லாரன்ஸ் கொடுத்த அடுத்த ரூ.50 லட்சம்: யாருக்கு தெரியுமா?

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்கனவே கிட்டத்தட்ட ரூபாய் 4 கோடி அளவிற்கு ராகவா லாரன்ஸ் நிதியுதவி செய்துள்ளார் என்பது தெரிந்ததே. முதல் கட்டமாக அவர் ரூபாய் மூன்று கோடி

18 ஆயிரமாக உயர்ந்த கொரோனா நோயாளிகள்: ஊரடங்கையும் மீறி உயரும் எண்ணிக்கை

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்தியாவில் இரண்டாம் கட்டமாக மே 3வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நேரத்திலும் ஓடிப்போய் காதலனை திருமணம் செய்த கல்லூரி மாணவி!

ஊரடங்கு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தி வரும் நிலையில் திருச்சி அருகே ஒரு காதல் ஜோடி வீட்டை விட்டு

கொரோனா விடுமுறையில் அப்பாவின் பிறந்த நாளை கொண்டாடிய 'பாகுபலி' நடிகை

கொரோனா விடுமுறையில் சினிமா நட்சத்திரங்கள் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருப்பதால் பல்வேறு விதமான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் என்பது தெரிந்ததே.