ஏதோ என்னால முடிஞ்சது… தமிழ் பிக்பாஸ் பிரபலம் செய்த நெகிழ்ச்சி செயல்!

கொரோனா பரவலைக் குறைப்பதற்காக சினிமா பிரபலங்கள் பலரும் நன்கொடைகளை வாரி வழங்கினர். இதில், சிலர் தங்களால் முடிந்த அளவிற்கு உணவுப் பொட்டலங்களை வழங்கியும் பாதுகாப்பு உபகரணங்களைக் கொடுத்தும் மக்களுக்கு உதவி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சித்தன் ரமேஷ் அவர்களும் தன்னால் முடிந்த உதவிகளை செய்துள்ளார்.

நடிகர் சித்தன் ரமேஷ் சினிமா துறைக்கு ஏற்கனவே அறிமுகமானவர் என்றாலும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். பிக்பாஸில் இவர் எதற்கும் அலட்டிக் கொள்ளாத ஒரு நபராக அன்பு குருப்பில் இருந்தார். சில நேரங்களில் ராஜா வீட்டு கன்னுக்குட்டி என்ற விமர்சனத்தையும் பெற்று இருந்தார். இருந்த போதிலும் நடிகர் சித்தன் ரமேஷ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தார்.

அவர் தற்போது கொரோனா காலத்தில் பணியாற்றி வரும் காவல் துறை ஊழியர்கள் மற்றும் சாலையோர மக்களுக்கு உணவுப் பொட்டலங்களையும் தண்ணீர் பாட்டிலையும் கொடுத்துள்ளார். அதோடு “என்னால் முடிந்ததை நான் செய்கிறேன். நீங்கள் வாருங்கள்… ஒன்றாக நின்று கொரோனாவை ஒழிப்போம்“ எனத் தனது இன்ஸ்டாவில் அழைப்பு விடுத்து இருக்கிறார். நடிகர் சித்தன் ரமேஷின் இந்தச் செயல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றிருக்கிறது.

More News

பார் செட்டப்பில் அசத்தல் போட்டோ ஷுட்… இளம் நடிகையின் வைரல் புகைப்படம்!

கன்னக்குழி அழகால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே.

இசைக்கு இளைஞர், மனதிற்கு கிளைஞர்: இசைஞானிக்கு கமல் வாழ்த்து!

இன்றைய இசைஞானி இளையராஜா அவர்கள் தனது 77வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் உள்பட பலர் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள்

குடும்பத்துடன் மரணம் என வதந்தி: நடிகர் மங்கள நாத குருக்கள் புகார் 

பல தமிழ் திரைப்படங்களில் குருக்களாக நடித்து வருபவர் மங்களநாத குருக்கள். இவரும் இவருடைய குடும்பத்தினர்களும் சமீபத்தில் இறந்து விட்டதாகவும் இவர்களை தகனம் செய்யப்பட்ட பணம் இல்லை

உலகிலேயே இந்தியாவில் பரவும் வைரஸ்தான் மிகவும் ஆபத்தானது… WHO கவலை!

இந்தியாவில் தற்போது பெரும் அளவில் பரவிவரும் பி.1.1617.2 வைரஸின் பரவல் தன்மை அதிகமாக இருக்கிறது என WHO கவலை தெரிவித்து உள்ளது.

இணையத்தில் வைரலாகும் சிபிராஜ் மனைவி, மகன்களின் புகைப்படம்!

பிரபல நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ் தற்போது தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளார் என்பதும் 'ஸ்டூடண்ட் நம்பர் ஒன்' என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் ஒரு சில திரைப்படங்களில் தனது