ஏதோ என்னால முடிஞ்சது… தமிழ் பிக்பாஸ் பிரபலம் செய்த நெகிழ்ச்சி செயல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா பரவலைக் குறைப்பதற்காக சினிமா பிரபலங்கள் பலரும் நன்கொடைகளை வாரி வழங்கினர். இதில், சிலர் தங்களால் முடிந்த அளவிற்கு உணவுப் பொட்டலங்களை வழங்கியும் பாதுகாப்பு உபகரணங்களைக் கொடுத்தும் மக்களுக்கு உதவி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சித்தன் ரமேஷ் அவர்களும் தன்னால் முடிந்த உதவிகளை செய்துள்ளார்.
நடிகர் சித்தன் ரமேஷ் சினிமா துறைக்கு ஏற்கனவே அறிமுகமானவர் என்றாலும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். பிக்பாஸில் இவர் எதற்கும் அலட்டிக் கொள்ளாத ஒரு நபராக அன்பு குருப்பில் இருந்தார். சில நேரங்களில் ராஜா வீட்டு கன்னுக்குட்டி என்ற விமர்சனத்தையும் பெற்று இருந்தார். இருந்த போதிலும் நடிகர் சித்தன் ரமேஷ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தார்.
அவர் தற்போது கொரோனா காலத்தில் பணியாற்றி வரும் காவல் துறை ஊழியர்கள் மற்றும் சாலையோர மக்களுக்கு உணவுப் பொட்டலங்களையும் தண்ணீர் பாட்டிலையும் கொடுத்துள்ளார். அதோடு “என்னால் முடிந்ததை நான் செய்கிறேன். நீங்கள் வாருங்கள்… ஒன்றாக நின்று கொரோனாவை ஒழிப்போம்“ எனத் தனது இன்ஸ்டாவில் அழைப்பு விடுத்து இருக்கிறார். நடிகர் சித்தன் ரமேஷின் இந்தச் செயல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com
Comments