உத்திரப்பிரதேசத்தில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தையின் பெயர் கொரோனா!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
உத்திரப்பிரதேசத்தில் புதிதாகப் பிறந்த பெண்குழந்தைக்குக் கொரோனா எனப் பெயர்ச் சூட்டப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அன்றைய தினத்தில் உத்திரப்பிரதேசம், கோரக்பூர் அடுத்த சோஹ்ரா கிராமத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு அக்குழந்தையின் மாமா “கொரோனா“ எனப் பெயர் சூட்டியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலால் 387,742 பேருக்கு நோய்தொற்று ஏற்பட்டு இருக்கிறது. மேலும், 16,782 உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் பெற்றோர்களின் ஒப்புதலோடு குழந்தையின் மாமா நிதேஷ் திரிபாதி “கொரோனா” எனப் பெயர் சூட்டியிருக்கிறார்.
அவர் கூறும்போது, “கொரோனா பிரச்சினையால் உலகம் ஒன்றிணைந்து இருக்கிறது. கொரோனா வைரஸ் ஆபத்தானது என்பதில் சந்தேகம் இல்லை. இது உலகில் பல மக்களைக் கொன்றது. ஆனால் இது நம்மில் பல நல்ல பழக்க வழக்கங்களை வளர்த்துக்கொண்டு வந்துள்ளது. இந்தக் குழந்தை தீமைக்கு எதிராக போராடுவதற்கான மக்கள் ஒற்றுமையின் அடையாளமாக இருக்கும்“ எனவும் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தனது கோரத் தாண்டவத்தைத் தொடங்கியிருக்கும் நேரத்தில் “கொரோனா“ எனப் பெயர் சூட்டப்பட்டது பற்றி பலரும் தற்போது கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com
Comments