கொரோனா பூமிக்குக் கொடுத்த வரம்!!! Co2 வின் அளவு 8% குறைந்திருக்கிறது!!!

  • IndiaGlitz, [Thursday,April 30 2020]

 

கொரோனாவின் தாக்கத்தினால் மனிதர்கள் அனைவரும் அல்லாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் இயற்கையும், விலங்குகளும் இயல்பான நிலைமைக்குத் திரும்பியிருக்கின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக உலகமே முடக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலைகளில் இருந்தும், வாகனங்களில் இருந்தும் வெளியேற்றப்படும் கரியமில வாயுவின் அளவு குறைந்திருக்கிறது. உலகம் முழுவதும் 8% (Co2) குறைந்திருப்பதாக சர்வதேச எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் சர்வதேச எரிசக்தி நிறுவனத்தின் தலைவர் பாத்திஹ் பீரோல் கொரோனா ஏற்படுத்தியிருக்கும் இந்த தாக்கம் உற்சாகத்தை தரவில்லை என்று கூறியிருக்கிறார். கொரோனா பாதிப்பினால் உலகம் முழுவதும் இறந்தவரிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. உலகப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன. தயாரிக்கப்படும் எரிசக்தியின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் எரிசக்திக்கான தேவை தற்போது உலகம் முழுவதும் குறைந்திருக்கிறது. உலகளாவிய நிதி நெருக்கடியைவிட எரிசக்தியின் தேவை 7 விழுக்காடு குறைந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் எரிசக்தி தேவையில் மிகக் கடுமையான சரிவு ஏற்பட்டு இருக்கிறது. கச்சா எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி போன்ற நுகர்வில் கடும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த தேவைக் குறைவினை நல்ல விஷயமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் அடுத்துவரும் காலக்கட்டங்களில் தேவை அதிகரிக்கும்போது அனைத்தையும் புதுப்பிக்க வேண்டிய அவசியத்திற்கு தள்ளப்படுவோம் எனவும் பீரோல் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவகையில் கார்பன் உமிழ்வில் உலகம் புதுக்காற்றை சுவாசித்து வருகிறது. உலக உமிழ்வில் கரியமில வாயுவின் அளவு 8% (Co2) குறைந்திருக்கிறது என சர்வதேச எரிசக்தி நிறுவனத்தின் தலைவர் பீரோல் மகிழ்ச்சித் தெரிவித்து இருக்கிறார்.