வண்டலூர் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று… அதிர்ச்சித் தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டு உள்ளதாகவும் அவற்றில் ஒரு சிங்கம் உயிரிழந்து விட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியகி இருக்கிறது.
கொரோனா நோய்த்தொற்று கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கண்டறியப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடமாக இந்நோயை எதிர்த்து உலகம் முழுவதும் போராடி வருகிறோம். அதோடு மனிதரை தாக்கும் இந்த நோய்த்தொற்று விலங்குகளை தாக்காது என்றும் விஞ்ஞானிகள் கருத்து கூறி இருந்தனர்.
ஆனால் உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் புலி, சிங்கம், நாய் போன்ற மிருகங்களுக்கும் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. அதுவும் மிருகக் காட்சி சாலையில் இருக்கும் மிருகங்களுக்கே கொரோனா நோய்த்தொற்று வருவதையும் மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இதனால் மனிதனிடம் இருந்து கொரோனா நோய்த்தொற்று விலங்குகளுக்கு பரவும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு அனைத்து மிருகக் காட்சி சாலைகளும் இழுத்து மூடப்பட்டன.
அந்த வகையில் சென்னையில் உள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியியல் பூங்காவும் ஊரடங்கு காரணமாக கடந்த மே 26 ஆம் தேதி முதல் மூடப்பட்டு உள்ளது. இந்நிலையில் அங்குள்ள 9 சிங்கங்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டு அவற்றில் ஒன்று உயிரிழந்து இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதைத்தவிர மற்ற 11 சிங்கங்களுக்கு இதேபோன்ற அறிகுறிகள் இருப்பதாகவும் அதனால் கொரோனா பரிசோதனைக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது 9 சிங்கங்களுக்கு கொரோனா உறுதிச் செய்யப்பட்ட நிலையில் வண்டலூரில் உள்ள குரங்கு, மான் போன்ற அனைத்து விலங்குகளும் தற்போது தனிமைப்படுத்தப் பட்டுள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout