வண்டலூர் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று… அதிர்ச்சித் தகவல்!

  • IndiaGlitz, [Friday,June 04 2021]

சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டு உள்ளதாகவும் அவற்றில் ஒரு சிங்கம் உயிரிழந்து விட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியகி இருக்கிறது.

கொரோனா நோய்த்தொற்று கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கண்டறியப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடமாக இந்நோயை எதிர்த்து உலகம் முழுவதும் போராடி வருகிறோம். அதோடு மனிதரை தாக்கும் இந்த நோய்த்தொற்று விலங்குகளை தாக்காது என்றும் விஞ்ஞானிகள் கருத்து கூறி இருந்தனர்.

ஆனால் உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் புலி, சிங்கம், நாய் போன்ற மிருகங்களுக்கும் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. அதுவும் மிருகக் காட்சி சாலையில் இருக்கும் மிருகங்களுக்கே கொரோனா நோய்த்தொற்று வருவதையும் மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இதனால் மனிதனிடம் இருந்து கொரோனா நோய்த்தொற்று விலங்குகளுக்கு பரவும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு அனைத்து மிருகக் காட்சி சாலைகளும் இழுத்து மூடப்பட்டன.

அந்த வகையில் சென்னையில் உள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியியல் பூங்காவும் ஊரடங்கு காரணமாக கடந்த மே 26 ஆம் தேதி முதல் மூடப்பட்டு உள்ளது. இந்நிலையில் அங்குள்ள 9 சிங்கங்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டு அவற்றில் ஒன்று உயிரிழந்து இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதைத்தவிர மற்ற 11 சிங்கங்களுக்கு இதேபோன்ற அறிகுறிகள் இருப்பதாகவும் அதனால் கொரோனா பரிசோதனைக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது 9 சிங்கங்களுக்கு கொரோனா உறுதிச் செய்யப்பட்ட நிலையில் வண்டலூரில் உள்ள குரங்கு, மான் போன்ற அனைத்து விலங்குகளும் தற்போது தனிமைப்படுத்தப் பட்டுள்ளன.

More News

நடிகை அனுஷ்கா ஷெட்டியின் சகோதரரா இவர்? குவியும் வாழ்த்துக்கள்!

தமிழ், தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா ஷெட்டி என்பதும் 'பாகுபலி' உள்பட பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

பொதுநலன் வழக்கு தாக்கல் செய்த ரஜினி பட  நடிகைக்கு ரூ.20 லட்சம் அபராதம்!

பொதுநல வழக்கு தொடர்ந்த பிரபல நடிகைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ரூபாய் 20 லட்சம் அபராதம் விதித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

சசிகலா அதிமுகவில் இல்லை… விளக்கம் அளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி!

தமிழக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று அக்கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

சாராய ஊறலைக் குடித்த பள்ளி மாணவர்கள்… மருத்துவமனையில் கவலைக்கிடம்!

கடலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராய ஊறலைக் குடித்த 3 மாணவர்கள் தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

பாதிப்பு குறைவு....! ஆனால் உயிரிழப்பு அதிகம்...பதறும் கொங்கு மண்டலம்......!

கோவையில் கொரோனா அதிகரித்து வந்த நிலையில், தற்போது பாதிப்பு சற்றே குறைந்துள்ளது.