பிரேசிலை தொடர்ந்து இன்னொரு நாட்டின் அதிபருக்கும் கொரோனா தொற்று!!! அதிர்ச்சித் தகவல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரு நாட்டின் அதிபருக்கே கொரோனா நோய்த்தொற்று ஏற்படும்போது அந்நாட்டின் அரசாங்கமே ஸ்தம்பித்து விடும் அபாயமும் இருக்கத்தான் செய்கிறது. சில மாதங்களுக்கு முன்பு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு அவர் பாதிப்பில் இருந்து முற்றிலும் குணமாகி மீண்டும் பணிக்குத் திரும்பினார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரேசில் பிரதமர் போல்சனோரோ விற்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தென் அமெரிக்க நாடுகளுள் ஒன்றான பொலிவியா நாட்டு அதிபர் ஜினைன் அனேஸ்க்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அதிபரே டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். தொற்று உறுதி செய்யப்பட்டாலும் அவர் நலமுடன் இருப்பதாகவும் தனிமைப்படுத்திக் கொண்டு அலுவலகப் பணிகளை தொடர்ந்து செய்து வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார். பொலிவியா தற்போது கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வரும் நாடாக மாறியிருக்கிறது. இதுவரை 44,113 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. 1,638 பேர் உயிரிழந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த மே மாதம் பொலிவியாவின் அதிபர் தேர்தல் நடைபெற இருந்தது. கொரோனா பரவல் காரணமாக வரும் செப்டம்பர் மாதத்திற்கு இத்தேர்தல் ஒத்தி வைக்கப் பட்டு இருக்கிறது. இந்நிலையில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் நிலைமை என்னவாகும் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. அதுமட்டுமல்லாது அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் முதற்கொண்டு 7 அமைச்சர்களுக்கும் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஒட்டுமொத்த அமைச்சரவையும் ஸ்தம்பித்து போயிருப்பதால் நிலைமை மேலும் சிக்கலாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout