கொரோனா ஏப்ரல் மாதம் முதல் நாளொன்றுக்கு 80 ஆயிரம் அதிகரிக்கிறது!!! WHO அதிர்ச்சி தகவல்!!!
- IndiaGlitz, [Thursday,May 07 2020]
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் உலகச்சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் உலகில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளொன்றுக்கு சராசரியாக 80 ஆயிரமாக அதிகரித்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த மார்ச் மாதத்தின் பாதிப்பு எண்ணிக்கையைவிட ஏப்ரல் மாதத்தில் கடுமையான கொரோனா தாக்கம் ஏற்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவாவில் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய WHO தலைவர் டெட்ராஸ் உலகில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா பாதிப்பின் மையமாக ஐரோப்பிய நாடுகள் அதிக பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. மேற்கு ஐரோப்பிய நாடுகளைவிட தற்போது கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதேபோல தென் ஆப்பிரிக்கா, தென் கிழக்கு ஆசியா, மத்தியத் தலைக்கடல் பகுதி, அமெரிக்கா போன்ற கண்டங்களிலும் பாதிப்பு படிப்படியாக அதிகரித்துக் கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கொரோனா பாதிப்பினால் உலக நாடுகள் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிவருகின்றன. இந்நிலையில் மற்ற நோய்கள் மீதான கவனம் குறைந்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.