இந்திய ஐ.ஐ.டி நிறுவனம் உருவாக்கிய கொரோனா பாதிப்பை அளவிடும் மாதிரி அட்டவணை !!!

  • IndiaGlitz, [Monday,May 11 2020]

 

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு விகிதங்களை அளவிடுவதற்காக ஒரு புதிய அட்டவணை மாதிரியை குவஹாட்டியில் உள்ள ஐ.ஐ.டி நிறுவனம் தாயாரித்து வெளியிட்டு இருக்கிறது. அறிவியல் அடிப்படையில் கணக்கிடும் நவீன அட்டவணை மாதிரியை உருவாக்கும் இந்தப் பணியில் குவஹாட்டி ஐ.ஐ.டி நிறுவனத்தோடு டியூக் என்யூஎஸ் சிங்கப்பூர் மருத்துவப் பல்கலைக்கழகமும் கைக்கோர்த்து கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை மாநிலம் வாரியாகக் கணக்கிடுவதற்கும் ஒட்டுமொத்த பாதிப்பை அளவிடும் வகையிலும் இந்த அட்டவணை மாதிரி உருவாக்கப் பட்டுள்ளது. எதிர்காலத்தில் அதிகரிக்கும் விகிதம் எவ்வாறு இருக்கும் என்பதை மதிப்பிடுவதற்கு இந்த மாதிரி அட்டவணை உதவியாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக பயன்படுத்தப் பட்டு வந்த அட்டவணை மாதிரிகள் தவறான கணிப்புகளை கொடுப்பதாகக் கூறப்பட்ட நிலையில் புதிய அட்டவணை மாதிரியை ஐ.ஐ.டி நிறுவனம் உருவாக்கி பயன்பாட்டிற்கு வழங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.