அமெரிக்காவில் கொரோனா தாக்கம்!!! பல இந்திய மாணவர்களின் கனவை வீணாக்கியிருக்கிறது!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் பரவல் அமெரிக்காவை புரட்டிப் போட்டிருக்கிறது. பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியிருக்கும் நிலையில் உயிரிழப்பும் 60 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல மாகாணங்களில் ஊரடங்குத் தளர்த்தப்பட்டு இருக்கிறது. இறைச்சிப் பதப்படும் தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது உள்ளிட்ட சில விதிகளை அமெரிக்க அதிபர் தளர்த்தியிருக்கிறார்.
இந்நிலையில் அமெரிக்காவிற்கு கல்வி பயில்வதற்காகச் சென்ற பல இந்திய மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அமெரிக்கப் பல்கலைக்கழக விடுதிகளில் பல வெளிநாட்டு மாணவர்கள் தங்கிபடித்து வருகின்றனர். கொரோனா பரவல் அதிகரித்த சமயத்தில் பல பல்கலைக்கழகங்கள் மாணவர்களை காலிசெய்யுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மாணவர்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கின்றனர். இந்தியாவில் விமான சேவை நிறுத்தப்படுவதற்கு முன்பு பல இந்திய மாணவர்கள் இந்தியாவிற்குத் திரும்பிவிட நினைத்தனர் ஆனால் அவர்களால் திரும்ப முடியாமல் தற்போது குறைந்த வாடகைக்கு வீடு கிடைக்குமா என்று தேடிக்கொண்டு வரும் அவலம் அரங்கேறியிருக்கிறது.
இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு சென்று படிக்கும் விகிதத்தில் சீனா முதல் இடத்தையும் அமெரிக்கா இரண்டாவது இடத்தையும் வகிக்கிறது. அமெரிக்காவில் மட்டும் 2 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் பயில்வதாக புள்ளிவிவரங்கள் தெரியவந்துள்ளது. இந்நிலையில் பல பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் அறிவிக்கப்படாத தேதிக்கு வகுப்புகளை ஒத்தி வைத்திருக்கின்றன. எனவே நிலைமை என்னவாகும் எனத் தெரியாமல் மாணவர்கள் தனித்து விடப்பட்டுள்ளனர். அதோடு, பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகும் என்ற பயத்தில் வளாகத்தை விட்டு காலிசெய்யுமாறு கல்வி நிறுவனங்கள் கூறுவதால் நிலைமை இன்னும் மோசமாகிறது.
வளாகத்தை விட்டு வெளியேறச் சொல்லும் நிர்வாகத்தை சில மாணவர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர் என்றாலும் தொடர்ந்த வற்புறுத்தல் அவர்களை அடுத்தக் கட்டத்தை நோக்கி சிந்திக்க செய்கிறது. அமெரிக்காவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிப்ரவரியின் தொடக்கத்தில் பல பல்கலைக்கழகங்கள் ஆன்லைனில் வகுப்புகளை நடத்தின. ஆனால் இப்போது கொரோனா பரவல் விகிதம் அதிகரித்திருப்பதால் ஆசிரியர்களைக்கூட சந்திக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது. கொரோனா முடிந்து விசா கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டிவருமோ எனச் சில மாணவர்கள் வருத்தம் தெரிவித்து வரும் நிலையில் சிலர் குறிப்பிட்ட கல்வியாண்டுக்கு மட்டுமே விசா வழங்கப்பட்டு இருக்கிறது, அதற்குள் படிப்பை முடித்துக்கொண்டு வேலையைத் தேட வேண்டுமே என்றும் கவலைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலைமை நீடிக்கும்போது அமெரிக்க பல்கலைக்கழகங்கள் கொரோனா சமயத்தில் மாட்டிக்கொண்டுவிட்ட மாணவர்களது விசா விதிகளில் விலக்கு அளிக்கப்படுமா எனக் கேள்வியெழுப்பி வருகின்றனர். அடுத்த கல்வியாண்டுகளிலும் இதே வகுப்பில் அனுமதிக்க வேண்டும் என்றும் சில மாணவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஏனெனில் இந்திய மதிப்பில் அமெரிக்க டாலக்கு ஈடான பணத்தை செலவு செய்து பல கனவுகளோடு அங்குள்ள பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் மாணவர்கள் தங்களது படிப்பை தொடருக்கின்றனர். இத்தகைய நெருக்கடிகளில் பல்கலைக்கழகங்கள் விலக்குக் அளிக்காவிட்டால் அவர்களின் நிலைமை கேள்விக் குறியாகிவிடும் எனவும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
மேலும், ஆன்லைன் போன்ற வகுப்புகளால் உண்மையான கல்வியைப் பெற முடிவதில்லை. இயல்பான கல்வி முறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் பாடங்களை உள்வாங்கிக்கொள்ள முடியாமல் மாணவர்கள் மேலும் மன அழுத்தத்திற்கு ஆளாகும் நிலைமை தோன்றியிருக்கிறது. அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர்களுக்கு வேறுமாதிரியான பிரச்சனைகளும் இருக்கத்தான் செய்கிறது. நேர மாறுபாடு என்ற பெரிய நெருக்கடியும் ஏற்படுகிறது. இணைய வேகத்தில் இந்தியா 130 ஆவது இடத்தில் இருக்கிறது. பிராண்பேட் இணைய வசதிகளில் 70 ஆவது இடத்தை வகிக்கிறது என்றாலும் மாணவர்களுக்கு இவை போதுமானதாக இருப்பதில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments