தமிழகத்தில் மக்கள் நடமாட்டத்திற்கும் தடையா? உலவும் தகவல்!

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தற்போது சற்று குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை தினம்தோறும் பாதிப்பு எண்ணிக்கைக் கூடிக்கொண்டே போகிறது. இதனால் 24 ஆம் தேதியோடு முடிவடையும் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக சில தகவல்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் சேவைக்காகத் திறந்து வைக்கப்பட்டு இருக்கும் அரசு அலுவலகங்களுக்கு மக்கள் தினம்தோறும் வந்து செல்கின்றனர். இவர்கள் மூலமாகக் கொரோனா பரவுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த நடமாட்டத்தைக் குறைப்பதற்கு தமிழகத்தின் அலுவலகச் சங்கங்கள் கோரிக்கை வைத்து உள்ளன.

தமிழகத்தில் கடந்த மே 10 ஆம் தேதி முதல் 2 வாரமாக முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஆனாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. காரணம் பொதுமக்கள் அத்யாவசியத் தேவைகளுக்கு வெளியே செல்வதை விடவும் மற்றக் காரணங்களைக் கூறிக்கொண்டு வெளியே செல்வது அதிகரித்து வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

இதனால் கொரோனா பரவலில் முதல் அலைக் காலக்கட்டத்தில் இருந்ததுபோல பொதுமக்களின் நடமாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அலுவலகச் சங்கங்கள் கோரிக்கை வைத்து உள்ளன. இதுபோன்ற விதிமுறைகளை கொண்டுவரும்போது மக்களின் நடமாட்டம் முழுவதும் குறைந்து போகும். மேலும் அரசு அலுவலகங்கள் தொடர்பான விஷயங்களை ஆன்லைன் வாயிலாக நிறைவேற்றிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு உள்ளது.

ஊரடங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று மருத்துவ நிபுணர்கள் குழு, மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து எம்எல்ஏக்கள் அடங்கிய அவையில் இன்று நடத்தப்பட இருக்கிறது. இந்நிலையில் அரசு அலுவலகங்களுக்கு பொதுமக்கள் வருவதை தடை செய்ய வேண்டும் என்று அலுவலகச் சங்கங்கள் கோரிக்கை வைத்து வருகின்றன. இதுகுறித்த முடிவுகள் இன்று தெரியவரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

உடலுறவின் போது கொரோனா பரவ வாய்ப்புள்ளதா..? தம்பதிகள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் என்னென்ன...?  

கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில், ஊரடங்கு சமயத்தில் தம்பதிகளுக்குள்  உடலுறவு வைத்துக் கொள்ளலாமா என்ற சந்தேகங்கள்

முறிந்த காதல்… இளம்பெண்ணின் அசால்ட் செயலுக்கு மில்லியன் கணக்கில் குவியும் லைக்ஸ்!

காதல் முறிந்த நிலையில் கையை அறுத்துக் கொள்வது, தற்கொலை செய்து கொள்வது போன்ற மடத்தனமான காரியங்களை செய்து கொண்டு இருக்கும்

கோவை நகரத்திற்காக 48 மணி நேரத்தில் ரூ.1 கோடி நிதி திரட்டிய அமெரிக்க தமிழர்!

கோவையில் மெடிக்கல் கல்லூரியில் படித்து தற்போது அமெரிக்காவில் டாக்டராக பணிபுரிந்து கொண்டிருக்கும் ராஜேஷ் ரங்கசாமி என்பவர் கோவை அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் மற்றும்

கமல்ஹாசன் மீது அவதூறு வழக்கு: மதுரை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் மகாபாரதம் குறித்து அவதூறாக பேசியதாக கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வழக்கின் விசாரணையில் முக்கிய உத்தரவை மதுரை ஐகோர்ட் பிறப்பித்துள்ளது

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மே 10ஆம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள்