கொரோனா: பரவாமல் தடுப்பது எப்படி??? தீக்குச்சி உணர்த்தும் விழிப்புணர்வு வீடியோ!!!
- IndiaGlitz, [Thursday,March 19 2020]
உலகம் முழுவதும் கொரோனா பரவாமல் தடுக்க, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு பரிந்துரைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா பரவும் விகிதத்தைத் தடுக்கும் விதமாக ஒரு அனிமேஷன் வீடியோ உருவாக்கப் பட்டு இருக்கிறது. இந்த அனிமேஷன் வீடியோ தற்போது இணையவாசிகளிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்றே சொல்லலாம்.
சில நிமிடங்களே ஓடும் இந்த வீடியோ காட்சியில் வரிசையாக தீக்குச்சிகள் அடுக்கி வைக்கப் பட்டு இருக்கின்றன. மேலும், எப்படி ஒரு தீக்குச்சி பற்றிக் கொண்டால், மற்ற தீக்குச்சிகளிடம் தீ பரவுமோ அதே தன்மையுடையது தான் கொரோனா வைரஸ். ஆனால் அந்த பற்றுதலில் இருந்து சிறிது நகர்ந்து கொண்டால் பின்னால் வரிசையில் உள்ள எவருக்கும் பரவாமல் தடுக்க முடியும். எனவே நம்மிடம் கொரோனா பரவாமல் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும்போது மற்றவர்களுக்கும் இந்த வைரஸ் தொற்றை முழுவதுமாகப் பரவாமல் தடுக்க முடியும். நோயில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்த வீடியோ காட்சி விளக்குகிறது.
சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறி இருப்பவர்களிடம் இருந்து சற்று தள்ளி இருப்பதும், இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் தங்களை தனிமைப் படுத்திக் கொள்வதும், முறையான கிருமிநாசினிகளைப் பயன்படுத்துவதும் தற்போது மேற்கொள்ள வேண்டிய அவசியமான செயல்கள். இதைத்தான் அந்த அனிமேஷன் வீடியோ தற்போது படமாக எடுத்துக் காட்டுகிறது. தீக்குச்சி வரிசை காட்சி படம் கொரோனா வைரஸ் தொற்றை விளக்குவதற்கு கண கச்சிதமாக பொருந்திப் போவதால் தற்போது பலர் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
Stay home. It’s all we can do. (@juan_delcan) pic.twitter.com/eLLj341gPE
— olivia wilde (@oliviawilde) March 15, 2020