அக்சயகுமாருடன் பணிபுரிந்த 45 பேருக்கு கொரோனா தொற்று: அதிர்ச்சியில் படக்குழு

  • IndiaGlitz, [Monday,April 05 2021]

பிரபல பாலிவுட் நடிகரும் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’2.0’ என்ற திரைப்படத்தில் நடித்தவருமான அக்ஷய்குமாருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவர் தன்னைதானே வீட்டில் தனிமைப்படுத்திகொண்டு மருத்துவரின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று அவர் தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி அக்ஷய் குமாருடன் தொடர்பில் இருந்த 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன .அக்ஷய்குமார் சமீபத்தில் ’ராம் சேது’ என்ற படத்தில் பணியாற்றினார். அந்த படத்தில் பணிபுரிந்த 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 45 பேர் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் என்பதும் அவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

அக்ஷய் குமாருடன் பணிபுரிந்த 45 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி என்ற தகவல் அக்ஷய் குமாருக்கு மட்டுமின்றி படக்குழுவினர்கள் அனைவருக்கும் பேரதிர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.