ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகளுக்கு கொரோனா!!! சாத்தியமே இல்லை என மருத்துவர்கள் அதிர்ச்சி!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
மெக்சிகோவில் ஒரே பிரவசத்தில் ஒரு பெண்ணிற்கு 2 ஆண் குழந்தை மற்றும் 1 பெண் குழந்தை பிறந்தது. குதூகலத்தில் இருந்த அதன் பெற்றோர்கள் சில மணித் துணிகளில் நரகமான நிலைக்குத் தள்ளப்பட்டனர். காரணம் பிறந்த 3 குழந்தைகளுக்கும் கொரோனா நோய்த்தொற்று இருப்பது சோதனையில் உறுதிசெய்யப் பட்டு இருக்கிறது. இதுவரை பிரசவத்தின்போது கொரோனா நோய்த்தொற்று குழந்தைகளுக்கும் பரவியதாக சான்று எதுவும் இல்லை. இந்நிலையில் ஒரே நேரத்தில் 3 குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு இருப்பது குறித்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.
மெக்சிகோவின் லூயிஸ் பொட்டோசி மாகாணத்தில் கடந்த 17 ஆம் தேதி ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்து இருக்கின்றன. அமெரிக்காவின் நோய்த்தொற்று நிபுணர் கொரோனா நோய்த்தொற்று தாக்கிய பெண்ணிற்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு கொரோனா நோய்ப் பரவாது என்று விளக்கம் அளித்து இருந்தார். மிக அரிதான நிலையில் தாயின் சுவாச உறுப்போடு தொடர்பு கொண்டால் மட்டுமே நோய்த்தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களை முகக்கவசம் அணியுமாறு வலியுறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் கொரோனா பாதித்த பெண்களிடம் இருந்து குழந்தைகளை பெரும்பாலும் பிரிக்க வேண்டாம் என்றே விஞ்ஞானிகள் அறிவுறுத்தி வந்தனர். இந்தத் தகவல்களை எல்லாம் பொய்யாக்கும் விதமாக தற்போது ஒரே பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு இருப்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
தாயிடம் இருந்து நஞ்சுக்கொடி வாயிலாக கொரோனா நோய்த்தொற்று பரவியிருக்கலாமா என்கிற ரீதியில் தற்போது ஆய்வுகள் முடுக்கிவிடப் பட்டு இருக்கின்றன. மேலும் மெக்சிகோவில் கொரோனாவால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை அந்நாட்டில் 23 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்து இருக்கின்றனர். நோய்த்தொற்று 1 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com